பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

புதிய உரக் கொள்கையின் கீழ் எரிசக்தி விதிமுறைகளில் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

Posted On: 21 MAR 2018 8:37PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு மத்திய உரத்துறையால் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

  1. புதிய உரக்கொள்கை 2015-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட எரிசக்தி விதிமுறைகளை 11 உர அலகுகளில் 2018 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்.
  2. நிர்ணயிக்கப்பட்ட எரிசக்தி விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 14 உர உற்பத்தி அலகுகளில், புதிய உரக்கொள்கை 2015-ன் கீழ், முன் அபராதத்துடன் தற்போதைய எரிசக்தி விதிமுறைகள் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
  3. தற்போது நடைமுறையில் உள்ள எரிசக்தி விதிமுறைகளின்படி நாப்தா அடிப்படையில் செயல்படும் 3 உர அலகுகள் மேலும் இரண்டாண்டுகள் அல்லது எரிவாயு இணைப்பு வழங்கும் வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  4. புதிய உரக்கொள்கை 2015-ன்படி நிர்ணயிக்கப்பட்ட எரிசக்தி விதிமுறைகள் 2020 ஏப்ரல் 1 முதல்  அடுத்த 5 ஆண்டுகளுக்கு  தொடரும்.

தற்போது அமலில் உள்ள எரிசக்தி விதிமுறைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு யூரியா உரம் எளிதாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் தயாரிக்கப்படும் உரத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் உர இறக்குமதியை குறைக்கவும் இது உதவும்.

உர உற்பத்தி அலகுகள் தங்களுடைய அலகுகளை மேலும் எரிசக்தி ஆற்றலுடையவைகளாக உருவாக்குவதற்கு செய்த முதலீட்டு செலவுகள் சிலவற்றை மீட்பதற்கும் இந்த ஒப்புதல் உதவும். எரிசக்தி ஆற்றல் திறன்மிக்க உர உற்பத்தி அலகுகள் கார்பன் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படும்.

நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், இந்திய வேளாண் துறை வளர்ச்சிக்கான முக்கிய பங்கையும் ரசாயன உர பயன்பாடு ஆற்றியுள்ளது.

2018-19 ஆண்டுகளில் இத்துறையால் அறிவிக்கப்பட்ட எரிசக்தி ஆற்றலுக்கான விதிமுறைகளை அமல்படுத்த அதிக மூலதனம் தேவை. இந்த முதலீடுகளின் நிதிப்பயன்கள் திரும்ப கிடைப்பதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால்  இந்த நிறுவனங்களின் பொருளாதார நிலவரம் எரிசக்தி சேமிப்பு திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஏற்றவகையில் இல்லை.

 

 

 



(Release ID: 1525885) Visitor Counter : 113


Read this release in: English