பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

பல துருவ உலகம் அவசியம் என்கிறார் திரு.பி.பி.சவுதாரி, உலகின் முன்னணி நாடுகளில் தனக்கு உரிய இடத்தை எடுத்துக் கொள்ள இந்தியா தயார் என்கிறார்

प्रविष्टि तिथि: 21 MAR 2018 3:57PM by PIB Chennai

உலகமயமாக்கலுடன் கூடிய பல துருவ உலகத்தை இந்தியா ஆதரிக்கிறது. உலகின் முன்னணி நாடுகளுடன் தனக்கு உரிய இடத்தை எடுத்துக் கொள்ள அது தயாராக உள்ளது. புதுதில்லியில் இன்று (21.03.2018) 2018 மார்ச் 21 முதல் 23 வரையிலான சர்வதேச போட்டிக் கட்டமைப்பின் ஆண்டு மாநாட்டின் 18-வது பதிப்பினை தொடங்கி வைத்து பேசிய மத்திய சட்டம், நீதி, கம்பெனி விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. பி.பி.சவுதாரி இதனை தெரிவித்தார்.

போட்டிச் சட்டங்களை அமல்படுத்த நாடுகளிடையே திறம்பட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய திரு. சவுதாரி, எல்லைத் தாண்டிய புலனாய்வுகள், நிறுவன இணைப்புகள் போன்ற பிரச்சனைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்களை எதிர்கொள்வது அவசியமாகிறது என்றும், குறிப்பாக பல்வேறு சட்ட அமைப்புகளை எதிர்கொள்ளும் நிலையிலும், பல்வேறு தடய சேகரிப்பு அமைப்புகள் தொடர்பாகவும் இது மிகவும் அவசியம் என்றார். உலக நம்பிக்கை எதிர்ப்பு ஒத்துழைப்பில் படிப்படியான, நெகிழ்ச்சித்தன்மை கொண்ட திட்டமிட்ட அணுகுமுறை மிகவும்அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலையத் தளத்தை பார்க்கவும்.

 


(रिलीज़ आईडी: 1525610) आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English