சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது.

Posted On: 20 MAR 2018 5:11PM by PIB Chennai

மத்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த மத்திய திட்டத்தை 1992 ஆம் ஆண்டு முதல் மூத்த குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்  நோக்குடன் செயல்படுத்தி வருகிறது. அடிப்படைத் தேவைகளான தங்குமிடம், உணவு, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதோடு ஆக்கபூர்வமானதும் சுறு சுறுப்பான வயது முதிர்வை ஊக்குவித்தலுக்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  

     இத்திட்டத்தின் கீழ் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். பஞ்சாயத் ராஜ் அமைப்புகள் ஆகியவற்றுக்கு முதியோர் இல்லங்கள், இயன்முறை மருத்துவ மையங்கள், பராமரிப்பு மையங்கள்  உள்ளிட்டவைகளை நடத்துவதற்காக மற்றும் பராமரிப்பதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

  மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த மத்திய திட்டம் தேவையின் அடிப்படையிலான திட்டமாகும். எனவே, மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ், இணையதளம் வாயிலாக முன்மொழிதல் பெறப்பட்டு, அனைத்து விதத்திலும் திருப்தியளிக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிதியுதவி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு விஜய் சம்ப்லா மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் தெரிவித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

 மேலும் தகவல்களுக்கு www.pib.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்

------


(Release ID: 1525484) Visitor Counter : 150


Read this release in: English