கலாசாரத்துறை அமைச்சகம்

8 –வது சர்வதேச நாடக ஒலிம்பிக் நிகழ்ச்சி இந்தியாவில் 25,000 கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது

प्रविष्टि तिथि: 19 MAR 2018 5:47PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தன்னாட்சி அமைப்பான தேசிய நாடக பள்ளி, இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாக்க, மேம்படுத்த, சீரமைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தேசிய நாடகப் பள்ளி அரங்க நிகழ்ச்சிகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட / எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கீழ் வருமாறு:

 

     விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நடனக் குழுக்களின் பங்களிப்புடன் தயாரிப்பு ரீதியிலான அரங்கப் பயிற்சிப் பட்டறைகள், இந்திய கிராமப்புற மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தை மறுவாழ்வு அளிக்கவும், பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நடத்தப்பட்டு வருகிறது.

 

     மத்திய அரசின் ஒப்புதலுடன் தேசிய நாடகப் பள்ளி எட்டாவது நாடக ஒலிம்பிக் விழாவில் 2018 பிப்ரவரி, 17 முதல் ஏப்ரல் 8 –ம் தேதி வரை நடத்துகிறது. 25 நாடுகளைச் சேர்ந்த 25,000 கலைஞர்கள் நட்பிற்காக குடைப்பிடிப்போம் என்ற கருத்தின் கீழ் இதில் பங்கேற்றுள்ளனர்.

 

     மத்திய கலாச்சாரம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.  

 


(रिलीज़ आईडी: 1525429) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English