உள்துறை அமைச்சகம்
சைபர் பாதுகாப்பு
Posted On:
20 MAR 2018 3:56PM by PIB Chennai
தேசிய சைபர் பாதுகாப்புக் கொள்கை (2013) சைபர்வெளியில் பாதுகாப்பை விரிவுபடுத்த ஆற்றல்மிக்க பொதுத் தனியார் பங்களிப்பை உருவாக்கவும் தொழில்நுட்பம் மற்றும் செயல் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு மூலம் இணைந்த ஈடுபாட்டை உருவாக்கவும் வகை செய்கிறது. சைபர் பாதுகாப்பில் பொதுத் தனியார் பங்களிப்புக்கான கூட்டுப் பணிக் குழு என்.எஸ்.சி.எஸ்.சில் அமைக்கப்பட்டு அது கீழ்க்காணும் பகுதிகளில் செயலாற்றி வருகிறது:
- வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் போன்ற முக்கியத் துறைகளில் தகவல் பகிர்வு மற்றும் மதிப்பீட்டு மையங்கள் அமைத்தல்.
- கொள்கை ஆராய்ச்சி, தரம் மற்றும் தணிக்கைகளில் நிபுணத்துவ மையங்கள் அமைத்தல்
- சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் இணைய தடயவியலில் திறன் மேம்பாடு.
- பொதுத் தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப கருவி சோதனை ஆய்வகம் அமைத்தல்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
****
(Release ID: 1525427)