சுரங்கங்கள் அமைச்சகம்
சட்ட விரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்கும் மணல் எடுக்கும் கட்டமைப்பு அறிமுகம்
Posted On:
20 MAR 2018 3:06PM by PIB Chennai
சுரங்கத் துறையில் கொள்கைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியை அரசு எடுத்தது முதல் சுரங்கத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் 2018 ஜனவரி மாதம் வரை தாதுக்கள் உற்பத்தி முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் இது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். புதுதில்லியில் இன்று சுரங்கம் மற்றும் தாதுக்கள் குறித்த 3வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், பல்வேறு முக்கிய தொழில்துறைகளுக்கு தேவையான அடிப்படையான மூலப் பொருட்களை சுரங்கத்துறை அளிக்கிறது என்றார்.
மணல் சுரங்க கட்டமைப்பையும் திரு. தோமர் அறிமுகப்படுத்தினார். இந்தக் கட்டமைப்பு பல்வேறு மாநிலங்களில் மணல் சுரங்கப் பணிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு, சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சில், சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கம் போன்ற அமைப்புகளுடனும் பொது மற்றும் தொடர்புடைய மற்றவர்களுடனும் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைகள் அடிப்படையில் இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பில் கூறப்பட்ட யோசனைகள் மாநிலங்கள் தங்களது கொள்கைகளை உருவாக்கவும் சட்டவிரோத மணல் எடுக்கும் பணிகளை கட்டுப்படுத்தவும் உதவும்.
(Release ID: 1525399)