குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய அஞ்சல் சேவை மற்றும் இந்திய நிறுவன சட்ட சேவை பயிற்சி அதிகாரிகள் குடியரசு தலைவருடன் சந்திப்பு

Posted On: 20 MAR 2018 2:27PM by PIB Chennai

இந்திய அஞ்சல் சேவை மற்றும் இந்திய நிறுவன சட்ட சேவைப் பயிற்சி அதிகாரிகளின் தனித்தனி குழுக்கள் இன்று (மார்ச் 20, 2018) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடையே பேசிய குடியரசுத் தலைவர் சேவைகளுக்கும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருப்பதாக கூறினார். வங்கிகள் இன்னும் சென்றடையாத மிகவும் பின்தங் கிய இடங்களிலும் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இன்றைய தொடர்புத் தொழில்நுட்பக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் கட்டமைப்பின் பங்களிப்பு குறித்து மறு சிந்தனை தேவைப்படுகிறது. அஞ்சல் அலுவலகங்களுடன் நவீன வங்கி செயல்பாடுகள் மற்றும் கட்டண முறைகளை இணைப்பதற்கான முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. சில வளர்ந்த நாடுகளில் இருப்பது போல ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும் கிடைக்கும் இடமாக இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இ-வர்த்தகத்தில் உள்ள மாபெரும் வளர்ச்சியால் அவையும் பயன்பெற முடியும்.                                      

இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது எனக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். 2025ம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக ஆக நமக்கு நாமே நாம் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த நடைமுறையில் இந்திய நிறுவன சட்ட சேவை அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. வர்த்தகங்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தரும் போது நிறுவனங்கள் துறை சட்டரீதியாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

******



(Release ID: 1525396) Visitor Counter : 98


Read this release in: English , Urdu