பிரதமர் அலுவலகம்

சயுனி யோஜனா திட்டத்தின் கீழ் அஜி நீர் அணை நிரப்புத் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 29 JUN 2017 9:10PM by PIB Chennai

அனைவரும் எவ்வாறு இருக்கிறீர்கள்? எல்லாம் நலமா?

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் திரு விஜய் அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் அவர்களே, முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேயர் மற்றும் இங்கே அதிக அளவில் கூடியுள்ள சகோர, சகோதரிகளே.

நயாரி என்பது தனித்துவம் வாய்ந்தது மற்றும் அஜி உம்மை ஒப்புக் கொள்ள வைப்பது. 2001 –ல் நான் குஜராத் முதலமைச்சராக பதவியேற்ற உடனே அஜி அணை நிரம்பி விட்டதாகவும், நான் அதை பார்வையிட வேண்டுமென்றும் ராஜ் கோட்டிலிருந்து எனக்கு ஒர் அழைப்பு வந்தது. நான் முதலமைச்சராக பதவியேற்ற தொடக்க காலகட்டம் அது இன்னமும் எனது நினைவில் உள்ளது. அப்போது நான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியை நான் பார்வையிட்டு வருகிறேன். 10-15 நாட்களில் அஜி அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாகவும், ராஜ்கோட் மக்கள்  மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் நான் கட்டாயம் செல்ல வேண்டுமென்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறப்பு நாளில் நீர் பூஜை செய்யும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அந்த நாளில் அஜி ஒரு மனிதனை எவ்வாறு நிர்பந்திருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். 40 ஆண்டுகளில் அஜி அணை அதன் முழு கொள்ளளவை எட்டுவது இது 11 –வது முறை என திரு விஜய் அவர்கள் என்னிடம் கூறினார்.  குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச். பகுதி மக்களுக்கு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்க வேண்டியதில்லை.

கடந்த காலங்களில் நான் ராஜ்கோட்டிற்கு வரும்போது அனைத்து வீடுகளின் வெளிப்பகுதியில் குழாயுடன் கூடிய சிறிய தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் அந்த தொட்டிகளில் இருந்து நீரை எடுத்து பயன்படுத்துவர். அந்த நாட்களில் ராஜ்கோட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் நீர் தேவை பற்றிய விவாதங்கள் நடக்கும். அந்த நாட்களில் சங்கம் தொடர்பான பணிகள் வேண்டி நான் பயணம் மேற்கொள்வேன் எந்த நாட்கள் நீர் விநியோகிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு சுற்றுப் பயணம் திட்டமிடப்படும். ரயில் டேங்கர்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு ராஜ்கோட்டிற்கு விநியோக்கிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள செய்திகளில் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றிருந்தது. அத்தகைய மோசமான நாட்களை நாம் பார்த்தோம். அதிக நீரை விநியோகிப்பதற்காக கூடுதல் எண்ணிக்கையிலான டேங்கர்களை அரசு பயன்படுத்தியது. மக்கள் இதற்கு பழகிவிட்டனர். பிரச்சினையில்லை, அடுத்தவாரம் குடிநீர் விநியோகிக்க டேங்கர்கள் வரும் நாம் சமாளித்துக் கொள்ளலாம். சில பகுதிகளில் காற்றழுத்த விசைக்குழாயான கைபம்புகளை அமைக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அது மிகப் பெரிய ஒன்றாக கருதப்பட்டது.

சகோதரர்களே, சகோதரிகளே கவனியுங்கள்.

அங்கேயிருந்து இப்போது குஜராத் எங்கே வந்துள்ளது. அப்போது நாங்கள் தண்ணீர் லாரிகளையும், கைப்பம்புகளையும் நம்பியிருந்தோம். இப்போது நாம் மிகப்பெரிய குழாய்களைப் போட்டுள்ளோம். அதன் நடுவே ஒர் மாருதி கார்கூட நுழைந்து செல்ல முடியும். அது ஏராளமான தண்ணீரை வழங்கமுடியும். அணையையும் நிரப்ப முடியும்.  சகோதரர்களே, சகோதரிகளே முன்நோக்குடன் ஒரு அரசு இருக்குமானால், பொதுமக்களின் நலனுக்காக அது அர்ப்பணிப்புடன் இருக்குமானால், பொதுமக்களின் வாழக்கையை மாற்றும் நோக்கத்துடன் அது இருந்தால், எத்தகைய நல்ல விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் அனுமானித்துக் கொள்ளலாம்.  குஜராத்தின் இன்றைய இளைஞர்கள், அதாவது 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழுவினர் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினர், குஜராத்தில் முந்தைய நிலைமை என்ன என்பதை அறியமாட்டார்கள்.  மக்கள் மின்சாரத்திற்காக மிகவும் அல்லல்பட்டார்கள்.  எப்போது மின்சாரம் வரும்?  சாப்பிடும்போது மின்சாரம் வருமா? அல்லது வராதா? விவசாயிகள் தண்ணீர் இறைக்கும் பம்ப்களை இயக்க விரும்பினால், அவர்கள் இரவு முழுவதும் அவர்கள் உறங்கமாட்டார்கள், அப்போதுதான் அவர்களது வயலுக்கு நீர் இறைக்க பம்ப்கள் ஓட எப்போது மின்சாரம் கிடைக்கும் என்பதை, அவர்களுக்கு அறிவிக்க இயலும். அந்த நாட்களை மறந்துவிடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.  நாம் எவ்வளவு முன்னேறி வந்துள்ளோம், எவ்வளவு கடுமையாக உழைத்துள்ளோம், எத்தகைய நல்ல நோக்கத்துடன் உழைத்துள்ளோம், எத்தகைய தியாகங்களைச் செய்து இதனை அடைந்திருக்கிறோம், இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டுமானால், முந்தைய காலத்தில் நமது பெற்றோர் எதிர்நோக்கிய இன்னல்களை புரிந்து கொள்ள வேண்டும்.  கட்ச், கத்யாவாடு போன்ற பகுதிகளைவிட்டு நீங்கி, நாடெங்கிலும் உள்ள குடிசைப் பகுதிகளுக்குச் சென்று, மக்கள் தங்குவதற்கான கட்டாய நிலை ஏற்பட்டதற்கு, வேறு எதைக் காரணமாக சொல்ல முடியும்.  ஒருவரிடம் 50 பிகா நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் தம் மகளுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார் என்ற நிலையில், தனது நிலத்தை அடமானம் வைத்து, கடன் வாங்க நினைத்தால், நிலத்தை வைத்துக் கொண்டு கடன் வழங்க எவரும் முன்வர மாட்டார்கள்.  தொழில்முறைக் கடன் வழங்குவோர், வெறும் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் கொடுப்பார்கள். இந்த நிலத்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பார்கள். எனவே, இந்தத் தொகையை வாங்கிக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் சென்றுவிடுங்கள் என்பார்கள். 50 பிகா நிலத்திற்குச் சொந்தக்காரர் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கடனை தனது நிலத்தை அடமானம் வைத்து, தனது மகள் திருமணத்திற்காக பெற முடியாது. காரணம், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நிலத்திற்கு மதிப்பேதும் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக, குஜராத்தின் உண்மை நிலவரம் இதுதான்.  இதற்கு யார் காரணம் என்று நான் விளக்க விரும்பவி்ல்லை. எனினும், எங்களுக்கு குஜராத் மக்கள் சேவையில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது முதல், அது கேசுபாய் பட்டேல் தலைமையிலாகட்டும், அல்லது ஆனந்தி பென், விஜய் பாய் ருபானி என யார் தலைமையிலாக இருந்தாலும், அல்லது நானே உங்களுக்கு சேவை செய்த வாய்ப்பு கிடைத்தபோதும்,          அந்த முழுமையான காலத்திலும் குஜராத் மக்களுக்கு தண்ணீர் வழங்க, மின்சாரம் வழங்க, கிராமங்களுக்கு சாலைகள் போட, நாங்கள் பூமிக்கும் ஆகாயத்துக்குமாக ஓடியோடி உழைத்தோம். ஆகையால் தான் உங்களை இன்று கண்ணுக்கு கண் நேராக பார்க்க முடிகிறது.  திருப்தி உணர்வுடன் உங்களுடன் பேச முடிகிறது. ஏதோ பெரிய உதவி செய்துவிட்ட எண்ணம் எங்களுக்கு இல்லை.  அத்தகைய எண்ணத்தை நாங்கள் வளர்த்துக் கொள்ளவும் கூடாது.  எங்களது கடமைகளை நிறைவுசெய்தோம் என்ற மன நிறைவு எங்களுக்கு உள்ளது. இதுவே, எங்களை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. ஏனெனில், பொதுமக்களாகிய நீங்கள் எங்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து வருகிறீர்கள்.

நான் அலைச்சல் மிகுந்த வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக இங்கு வந்திருப்பதாக திரு. விஜய் அவர்கள் சற்று முன்பு உங்களிடம் தெரிவித்தார். நமது நாட்டு மக்கள், குஜராத் மக்கள் ராஜ்கோட்டைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து என்னிடம் அதிக அன்பைக் காட்டி வருவதால் நான் சோர்வு அடைவதற்கு காரணம் ஏதும் இல்லை. திரு. நிதின் அவர்கள் தெரிவித்தவாறு சயுனி திட்டத்தை ராஜ்கோட், ஹாய்மு மற்றும் கட்வி ஹோல் நான் தொடங்கி வைத்து இது தொடர்பாக  கணினி மென்பொருளால் நான் விளக்கத்தை வழங்கியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

ஏராளமான கேள்விகள் இது தொடர்பாக எழுப்பப்பட்டது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தற்குரியதல்ல, தேர்தல் நடைபெறுவதால் திரு. மோடி இதைப்பற்றி பேசுகிறார் என்றெல்லாம் கூறினர்.  அரசில் உள்ளவர்கள் இயற்கையாகவே எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுப்பதில்லை, சில செய்தித்தாள்களும் இத்திட்டம் செயல்படுத்துவதற்குரியதுதானா?  என்று கேள்வி எழுப்பினர். இவ்வளவு அதிகமான நிதியை எவ்வாறு திரட்டுவது, இத்தனை குழாய் இணைப்புகளை எவ்வாறு அமைப்பது? 2040 வரை எதுவும் நடைபெறாது. சந்தேகம் நிறைந்த ஒரு சூழ்நிலை அந்த நேரத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது குஜராத் மக்களுக்கு முழு நம்பிக்கையுடன் இந்த திட்டம் நடைபெறும் என நான் உறுதி அளித்தேன். குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் குடிநீர் வழங்குவதற்காக நாங்கள் கடினமாக உழைப்போம் என்று உறுதிமொழி அளித்தோம்.

பல்வேறு பொருட்களுக்கு அதிக நிதி நிலை நிதிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் குஜராத்தின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும், சவுராஷ்டிராவில் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் ககட்ச்–ன் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டால் இந்த நிலைமை உலகம் முழுவதிலும் இருந்து நிதியை ஈட்டும். குஜராத்தின் வளர்ச்சி புதிய உயரத்தை எட்டும் என்று நாங்கள் முழுமையாக அறிந்திருந்தோம். இப்பொழுது இதற்கான பயன்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே 7 மாதங்களில் பார்க்கிறேன். இத்திட்டம் இல்லையேல் அக்டோபர் நவம்பர் காலகட்டங்களில் அஜி அணை வறண்டு விடும். இன்னும் தனது முழுத் தாக்கத்தை மழை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலம் சற்று நனைந்திருக்கிறது இதற்கே அஜி அணைக்கு முழு வேகத்துடன் நீர் பெருக்கெடுத்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் செயலை பாருங்கள் 470 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து நதிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரை 65 அடுக்கு கட்டிடத்திற்கு இணையான உயரத்திலுள்ள நர்மதா அணைக்கு நாம் கொண்டு செல்கிறோம். அறிவியல் அதற்கான தனித்துவத்துடன் உள்ளது. 65 அடுக்கு கட்டிடத்திற்கு இணையான உயரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு சென்றால் மட்டுமே உங்கள் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும்.

சகோதர சகோதரிகளே

இதற்கு நிதி தேவை. இது பொது மக்களின் பணம், பொது மக்கள் நன்மைக்காக இது பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதை வீணாக்கக்கூடாது. சரியான முறையில் பொது மக்கள் நிதியை பயன்படுத்த வேண்டும். சரியான முறையில் பொது மக்கள் நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு இத்திட்டம் சிறந்த உதாரணம் மற்றும் சர்தார் சரோவர் அணை பணிகள் 10 நாட்களில் முடிக்கப்பட்டது. முதலமைச்சர் அவரது சகாக்கள் இந்த அணையின் மதகுகளை மூடினர். தடைகள் இருந்த போதும் ஆனந்தி பென் ஆட்சி காலத்தில் அணை மதகுகள் பணி நிறைவு பெற்றது. இதில் சிக்கலை உருவாக்கியோர் குறித்து நர்மதா வரலாற்றை எழுதும் போது அனைவரும் அறிந்து கொள்வர். குஜராத் உரிமைகளை பறிக்க கூடிய அலட்சியக்காரர்கள் ஏராளாமானோர் உள்ளனர். இவர்கள் பொது மக்களை எப்போதும் ஐயத்தோடே வைத்திருக்க மோசமான செயல்களை செய்தனர்.

சகோதர சகோதரிகளே, இப்போது தண்ணீர் உள்ளது என்றபோதிலும், அதனுடன் பொறுப்புகளும் சேர்ந்து வருகின்றன. இந்தக் கடினங்களில் இருந்து நாம் எவ்வாறு விடுபட்டோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என ராஜ்கோட் மற்றும் சவுராஷ்டிரா மக்களை கேட்டுக்கொள்ள நான் விரும்புகிறேன். இது இப்போது வெறும் தண்ணீர் மட்டும் அல்ல. இது தொட்டதெல்லாம் துலங்கும். இது வளத்தை கொண்டு வரப்போகிறது. இது கடவுளின் அன்பளிப்பு. கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இனிப்பு கீழே விழுந்து விட்டால் அதற்காக நாம் கடவுளிடம் மன்னிப்பு கோரி கீழே விழுந்த இனிப்பு துகள்களை சேரிப்போம். அதே போல் தண்ணீரை வீணாக்குவதற்கு நமக்கு உரிமை இல்லை. நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும். மேலும் நமக்கு தேவையான நீர் இருக்கும் போது, தண்ணீர் சேமிப்பு குறித்து பேச எனக்கு உரிமை உள்ளது. எனவே தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க கட்ச், சவுராஷ்டிரா மற்றும் குஜராத் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களில் சிலர் வழிபாடு நடத்துவதற்காக மஹுடிக்கு சென்றிருக்கலாம். மஹுடிக்கு செல்லும் மக்கள், குறிப்பாக ஜைன சமூகத்தை சேர்ந்த மக்கள், மஹுடிக்கு அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். மஹுடிக்கு செல்லும் மக்களுக்கு புத்தி சாகர் ஜி மஹாராஜ் அளித்த போதனைகள் பற்றி தெரிந்திருக்கும். புத்தி சாகர் மஹாராஜ் 90 ஆண்டுகளுக்கு முன் அங்கு இருந்தார். 90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் இவ்வாறு எழுதியுள்ளார். ஒரு நாள் தண்ணீர் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருளாக இருக்கும் என அவர் எழுதியுள்ளார். 90 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது கைப்பட எழுதியது இப்போதும் உள்ளது. 90 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த பெரும் மகான் தண்ணீர் கடைகளின் விற்பனைப் பொருளாக இருக்கும் எனக் கணித்திருக்கிறார். இன்று நாம் கடைகளில் இருந்து பிஸ்லேரி தண்ணீர் பாட்டில்களை காசு கொடுத்து வாங்குகிறோம். குடிப்பதற்காகவும் பாசனத்திற்காகவும் இந்த வகையில் தண்ணீரை வாங்கி நாம் பயன்படுத்த வேண்டுமா? ராஜ்கோட் ஒரு அதிநவீன நகரமாக மாறிவரும் நிலையில் தற்போது நமக்குப் போதுமான தண்ணீர் உள்ளது. இந்த நேரத்தில் கழிவுநீரை நிர்வகிக்கும் முக்கியமான பணி ராஜ்கோட் முன் உள்ளது. கழிவு நீர் கால்வாய்க்கு செல்லும் நீரை நாம் மறுசுழற்சி செய்து அதனை ராஜ்கோட்டில் தொழிற்சாலைகள், தோட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நாம் தரமான குடிநீருக்கு கஷ்டப்பட வேண்டியிருக்காது. ராஜ்கோட் வளர்ச்சி பெற்றால் அஜி மற்றும் நியாரியில் தாகம் தணிக்க நாம் தண்ணீருக்கு கஷ்டப்பட வேண்டாம். இந்தப் பணியைத் தான் நாம் செய்திருக்கிறோம். எனவே, சகோதர சகோதரிகளே, குறிப்பாக உழவர்களே, சவுராஷ்டிரா, ட்ச் மற்றும் குஜராத் உழவர்களே, நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போது சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மாறும்படி கட்ச் உழவர்களுக்கு நான் விடுத்த கோரிக்கை முழுமையாக ஏற்கப்பட்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த கட்ச் பகுதியிலும் அவர்கள் சொட்டு நீர் பாசன முறையை கடைப்பிடித்தனர். ஒட்டுமொத்த பனஸ்கந்தா பகுதியிலும் சொட்டு நீர்ப் பாசன முறையை அதிகரித்து, அவர்கள் குறு பாசனத்தை கடைப்பிடித்து அந்தப் பகுதிகளில் வேளாண்  முறையை மாற்றி உள்ளனர்.

 

சகோதரர்களே, சகோதரிகளே,

     ஒவ்வொரு வயலுக்கும் சொட்டு நீர் பாசன வசதி செய்துதருவது, குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிக மகசூல் பெறும் பயிர்களுக்கான தெளிப்பு பாசன வசதி போன்றவற்றை அளிப்பது அறிவியலுக்கு இன்றைய நிலையில் பெரிய விஷயமல்ல. ராஜ்கோட்டில் உள்ள பொறியியல் தொழில்துறையினர் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதால், அவர்கள் தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக் கொண்டு, விவசாயிகள் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பாசனத்திற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும். கருவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ராஜ்கோட் பொறியியல் தொழில்துறையினர் இத்தகைய கருவிகளை விவசாயிகளுக்கு செய்து தரும் திறன் கொண்டவர்கள். அவர்கள் இந்தத் திறனை வெளி உலகத்துக்கு செய்துகாட்டி நிரூபிப்பதுடன், குஜராத்துக்கு மட்டுமன்றி, இந்தியாவிற்கு மட்டுமன்றி, உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்துக்குமே முன்மாதிரியாக வரவேண்டும்.

சகோதரர்களே, சகோதரிகளே,

     இன்று இந்த இளம் மாணவர்களைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது குறித்து, நான் மகிழ்ச்சியடைகிறேன்.  சிலரைப் பொறுத்தவரை ஹேக்கத்தான் என்பது ஒரு புதிய வார்த்தை.  ஆனால், இந்த வார்த்தையை சரியாக புரிந்து கொள்வது முக்கியமானது. பொதுவாக அரசு அதிகாரிகள், அரசுப் பணியில் நீண்டகாலம் பணியாற்றியுள்ள நிலையில், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டு விடுகிறார்கள். கடவுள் நம் அனைவருக்கும் அறிவைக் கொடுத்துள்ளார். அவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தம்மிடம் தீர்வு இருப்பதாக நினைக்கின்றனர்.  பழங்காலத்தில் இது சாதாரணமாக இருந்தது. எனினும், இத்தகைய உணர்வை நான் மாற்றியுள்ளேன்.  125 கோடி இந்தியர்களும் நம்மைவிட அதிக அறிவு உள்ளவர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி வருகிறேன்.  இளைய தலைமுறை மிகவும் புத்திசாலித்தனமாது என்று அவர்களிடம் கூறிவருகிறேன்.  நாம் பிரச்சினைகள் குறித்து சொன்னால், அவர்களால் அவற்றுக்கு தீர்வு காண முடியும்.  சில காலத்திற்கு முன்னதாக, மிகவும் கடினமான, மிக அதிக நேரம் பிடிக்கக்கூடிய அதிக உழைப்பு மற்றும் அதிக பணம் தேவைப்படக்கூடிய பணிகளின் பட்டியலை தயாரிக்கும்படி மத்திய அரசின் துறைகளைக் கேட்டிருந்தேன்.  இந்த விஷயம் குறித்து, தொடர்ந்து நினைவூட்டி வந்தேன்.  தொடக்கத்தில் அவர்கள் தங்களது துறையில் எல்லாம் சரியாகவே உள்ளது என்று கூறிவந்தனர். ஆனால், நான் சில கடினமான பணிகள் இருக்கக்கூடும், அவற்றை கண்டறிந்து எனக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டு வந்தேன். அவர்கள் 500 விஷயங்களில் மறுசிந்தனை அவசியப்படும் என்று தெரிவித்தனர். நான் ஒரு ஹேக்கத்தானுக்கு ஏற்பாடு செய்தேன்.  நாட்டின் பொறியியல் கல்லூரிகளிடம் இதோ 500 பிரச்சினைகள் உள்ளன, நீங்கள் குழுக்களை உருவாக்கி, இரவும் பகலுமாக உங்கள் கணினி முன்னர் அமர்ந்து தீர்வு காணுங்கள் என்றேன்.  இந்த முயற்சியில், 4 ஆயிரத்து 200 மாணாக்கர்கள் பங்கேற்று, இரவும் பகலுமாக 50 மணி நேரம் செலவிட்டு, இந்த 500 பிரச்சினைகளுக்கும் புதிய தீர்வுகளை கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட அரசு துறையினர் இந்த 500 பிரச்சினைகளுக்கான மாணாக்கரின் தீர்வுகளை பொதுவாக ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

 

ராஜ்கோட் மாநகராட்சி தன்னை அதிநவீன நகரமாக்க என்ன செய்ய வேண்டும்மக்கள் பங்கேற்பை எவ்வாறு உயர்த்துவது? போக்குவரத்துப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது, வரி செலுத்துகை அமைப்பை எவ்வாறு மேம்படுத்துவது? ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? இது வைஃபை யுகம்.  ராஜ்கோட் நகரில் வைஃபை மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் எவ்வாறு டிஜி்ட்டல் மயமாக்குவது? இத்தகைய 100 பிரச்சினைகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். குஜராத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளையும், சௌராஷ்ட்ரா முழுமையிலும் உள்ள அனைத்து கல்லூரிகளையும் இந்த 100 பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போட்டிகளில் பதிவு செய்து பங்கேற்க வருமாறு அழைக்கப்பட்டனர்.  ஜூலை 29-ஆம் தேதி தொடங்கும் இந்த ஹேக்கத்தானில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.  ராஜ்கோட்டின் தோற்றத்தை மாற்றுவது எப்படி, ராஜ்கோட்டின் அமைப்புகளை நவீனப்படுத்துவது எப்படி, இதையெல்லாம் கல்லூரியில் பயிலும் நமது இளைய தலைமுறையினர் செய்யப் போகிறார்கள்.  அவர்களது ஆற்றலுக்கும், ஆர்வத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களைப் பாராட்டுகிறேன். இந்த ஹேக்கத்தான், மக்கள் பங்கேற்பை உயர்த்தும் என நம்புகிறேன்.  இதில் ஒவ்வொருவரும் உதவுவார்கள், ஒவ்வொருவரும் இதனை ஊக்கப்படுத்துவார்கள். நமது புதிய தலைமுறையினர், கல்லூரி செல்லும் தலைமுறையினர், உலகுடன் மொபைல் தொலைபேசிவழி தொடர்பு கொள்ளும் தலைமுறையினர், அனைத்துப் பணிகளையும் கனிணியில் செய்யும் தலைமுறையினர், ராஜ்கோட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஹேக்கத்தானில் பங்கேற்கவுள்ளனர்.  இதில் எனக்கு முழுநம்பிக்கை உள்ளது.

சகோதரர்களே, சகோதரிகளே,

அஜி அணையில் தண்ணீர் வந்துள்ளதைக் காண எவருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது? இந்த மகிழ்ச்சி உணர்வுடன் சௌராஷ்ட்ரா பகுதியை பசுமையாகக் காணும்போது, மேலும் எவ்வளவு மகிழ்ச்சியை நாம் உணர்வோம்.  இதனை மனதில் கொண்டு,  நம்  மாநில அரசுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.  சௌநி திட்டம் சந்தேக மேகங்களால் சூழ்ந்திருந்து, இன்றைய நிலையில் வெற்றிகரமாக மாறியுள்ளது.  இந்தத் திட்டச் செலவினத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், இந்தத் தண்ணீரை பருகவுள்ளனர்.  நர்மதையின் இந்தத் தண்ணீர், இந்தப் புனிதநீர் கடவுளின் ஆசீர்வாதமாக நம்மிடையே வந்துள்ளது.  இந்தத் தண்ணீர் நமது எதிர்காலத்தை மாற்றியமைக்கட்டும்.  இந்த நல்வாழ்த்துக்களுடன் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

     அனைவருக்கும் நன்றி.

 



(Release ID: 1525393) Visitor Counter : 67


Read this release in: English