மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஷெட்யூல்டு வகுப்பு, பழங்குடியின பெண்கள் உள்ளிட்ட மகளிரின் எழுத்தறிவுப் பிரச்சினைகளுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தீர்வு

Posted On: 19 MAR 2018 5:41PM by PIB Chennai

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் பெண்கள் எழுத்தறிவு வீதம்,  7 வயதுக்கு அதிகமான குழுவினர் தொடர்பாக முறையே, 56.46 சதவீதம் மற்றும் 49.35 சதவீதமாக இருந்தது.

     இந்த எழுத்தறிவு வீதத்தை உயர்த்துவதற்கு வயது வந்தோர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கென மத்திய அரசு திட்டமான சாக்ஷார் பாரத் திட்டம் 26 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள 410 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வயது வந்த பெண்கள் எழுத்தறிவு வீதம் 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ள மாவட்டங்கள், இடதுசாரி தீவிரவாதம் பாதித்த மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றன. மகளிர் மற்றும் இதர வாய்ப்பு வசதிகளற்ற குழுவினருக்கு திட்டம் தனிக்கவனம் செலுத்துகிறது.

     மேலும், மத்திய அரசு உதவி திட்டமான, சர்வ சிக்ஷா அபியான் திட்டமும், 6 முதல் 14 வயது வரையிலான குழுவினர் அனைவருக்கும் தொடக்கக்கல்வி அளிப்பதற்கு 2009-இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துடன் இணைந்து, இதற்கென செயல்படுகிறது.

     மக்களவையில் இன்று (19.03.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு. உபேந்திர குஷ்வாகா இத்தகவலை தெரிவித்தார்.

 

--------



(Release ID: 1525351) Visitor Counter : 105


Read this release in: English