மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நிகர்நிலையாக்கப்படும் பல்கலைக்கழகங்கள் கல்வியை வர்த்தகமயமாக்குவதில் ஈடுபடக்கூடாது

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2018 5:38PM by PIB Chennai

பல்கலைக்கழக மானியக் குழு (நிகர்நிலையாக்கப்படும் பல்கலைக்கழகங்கள்) வரன்முறைகள் 2016 அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்த வரன்முறைகள் http://www.egazette.nic.in/WriteReadData/2016/170661.pdf. என்ற இணைய முகவரியில் இடம்பெற்றுள்ளன. இந்த வரன்முறையின்படி எந்த நிகர்நிலையாக்கப்படும் பல்கலைக்கழகமும் சேர்க்கைக்கான தேர்வு நடத்துவதற்கு ஆகும் செலவைத் தவிர கூடுதலாக எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது. மேலும் இந்த வரன்முறைகளின்படி நிகர்நிலையாக்கப்படும் பல்கலைக்கழகம் எந்த வகையிலும் கல்வியை வர்த்தகமயமாக்குவதில் ஈடுபடக்கூடாது என்பதுடன் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சமற்ற அணுக்கத்தை அளிக்க வேண்டும்.

 

தனியார் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழு (தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகத் தரங்கள்) வரன்முறை 2013ன் படி வரன்முறைப்படுத்தப்படுகின்றன. தேர்வுக்கான கட்டணம், பயிற்சி மற்றும் இதர கட்டணங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் முடிவு செய்யப்படுகின்றன.

இந்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு. சத்ய பால் சிங் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இடம்பெற்றுள்ளது.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1525349) வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க: English