கலாசாரத்துறை அமைச்சகம்

அருங்காட்சியக மானிய திட்டத்தின் கீழ் 2014 முதல் 2017 வரை 102 அருங்காட்சியகங்கள் நவீனமயம் மற்றும் மேம்பாட்டுக்காக ரூ. 97 கோடி நிதி ஒதுக்கீடு: டாக்டர் மகேஷ் சர்மா

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2018 5:52PM by PIB Chennai

கலாச்சார அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தேசிய அருங்காட்சியகம் (புதுதில்லி), நவின் கலைகளுக்கான தேசிய கேலரி (தில்லி, பெங்களூரு மற்றும் மும்பை கிளைகள்), இந்திய அருங்காட்சியகம் (கொல்கத்தா), விக்டோரியா நினைவு அரங்கம் (கொல்கத்தா), சாலர்ஜங் அருங்காட்சியகம் (ஐதராபாத்) மற்றும் அலகாபாத் அருங்காட்சியகம் (அலகாபாத்) ஆகிய தேசிய அளவிலான ஆறு அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகங்கள் அமரும் வசதி, குடிநீர் வசதி, உணவகம், கழிவறை, மின் ஏணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதி, நடைபாதை வசதி உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு ஏற்ற வசதிகளை அளிக்கின்றன. சிறார்களுக்கான அருங்காட்சியகம் எதையும் கலாச்சார அமைச்சகம் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை.

கலாச்சார அமைசகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகங்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் வகையில் மேம்பாட்டு மற்றும் நவீனமயமாக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2016-17ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள்:

ஆண்டு

ஒதுக்கப்பட்ட நிதி (ரூ. கோடிகளில்)

பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள்ள அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை

2016-17

48.90

38

 

இந்தத் தகவல் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை (தனிப்பொறுப்பு), சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைசர் டாக்டர் மகேஷ் சர்மா எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் உள்ளது.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1525318) வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க: English