வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நகர்ப்புறங்களை மாற்றியமைப்பதில் சமத்துவ, நீடித்த மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்: ஹர்தீப் புரி

Posted On: 18 MAR 2018 7:48PM by PIB Chennai

நகர்ப்புறங்களை மாற்றியமைக்கும் முறையில் சமத்துவம், வாழ்க்கைத்திறன் மற்றும் ஜனநாயக அரசு நிர்வாகத்தைக் கொண்டுவர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் புரி வலியுறுத்தினார். ஐதராபத்தில் குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைத்த உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதற்கான முதலாவது தேசிய ஆலோசனை மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

அனைவரையும் உள்ளடக்கிய, தரமான வாழ்க்கைக்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நீடித்த விரைவான வளர்ச்சிக்கான சமூக பொருளாதார சூழலை அளிக்கக்கூடிய நகரங்கள் தேவைப்பட்டால் நியாயமான மாற்றம் தேவை என திரு. புரி வலியுறுத்தினார். இதனை எட்டுவதற்கு கீழ்க்காணும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

1) உள்ளாட்சிகளுக்கு செயல் சுயாட்சி இருக்க வேண்டும்.

2) அவற்றுக்கு நிதி சுயாட்சி இருப்பதுடன் நிதி சாத்தியத்தை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

3) நகர்ப்புற உள்ளாட்சிகளின் அதிகாரத்தை அரசியலாக்கக் கூடாது

4) நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சேவை அளிக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் சிறப்பு பெற்ற பணியாளர்கள் தேவை.(Release ID: 1525241) Visitor Counter : 88


Read this release in: English