பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பி என் பி மோசடி வழக்கில் 107 நிறுவனங்கள் மற்றும் 7 எல் எல் பி நிறுவனங்கள் எஸ் எஃப் ஐ ஓ புலனாய்வில் வந்துள்ளன.
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2018 5:43PM by PIB Chennai
2008 லிமிடெட் லயபிலிட்டி பார்ட்னர்ஷிப் சட்டத்தின் பிரிவு 43(3)(c) (i) மற்றும் 2013 கம்பெனிகள் சட்டம் பிரிவு 212 (1)(c) ஆகியவற்றின்படி 107 கம்பெனிகள், 7 எல் எல் பி நிறுவனங்கள் ஆகியவற்றின் விவகாரங்கள் குறித்து புலானய்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் திரு நீரவ் மோடி (பயர்ஸ்டார் டைமண்ட் குரூப்) மற்றும் திரு. மெஹூல் சினுபாய் சோக்சி (கீதாஞ்சலி குரூப்) ஆகியோருக்குச் சொந்தமானவை. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்குடன் தொடர்புடைய மிக முக்கிய மோசடி விசாரணை அலுவலகம் (எஸ் எஃப் ஐ ஓ) இந்த புலனாய்வை மேற்கொள்ளும். தற்போது இந்தப் புலனாய்வு நடைபெற்று வருகிறது.
மக்களவையில் இன்று (16.3.2018) மத்திய கம்பெனி, சட்டம், நீதித்துறை இணை அமைச்சர் திரு பி பி சவுதாரி இதனைத் தெரிவித்தார்.
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1525239)
வருகையாளர் எண்ணிக்கை : 147