நிதி அமைச்சகம்

பொதுத் துறை வங்கிகளில் ரிசர்வ் வங்கி உடனடி சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது

Posted On: 16 MAR 2018 5:58PM by PIB Chennai

வங்கிகளில் மிகச்சிறந்த நிதி ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான உடனடி சரிசெய்யும் நடவடிக்கை (பிசிஏ) கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட கண்காணிப்புப் பகுதிகளான முதலீடு, சொத்துத் தரம், (நிகர செயல்படாத சொத்துகள் விகிதாச்சார அடிப்படையில் கவனிக்கப்படுவது), லாபம் ஈட்டும் தன்மை போன்றவற்றில் எச்சரிக்கை நிலை தாண்டப்படும் போது வங்கிகளுக்கு சரிபார்ப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள உதவுவதற்காக இந்த கட்டமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், சில ஆபத்தான செயல்பாடுகளை தவிர்க்கவும், நடைமுறைத் திறனை மேம்படுத்தவும், தங்களைத் தாங்களே வலுப்படுத்த மூலதனத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவும் இது உதவுகிறது. அதேசமயம் இந்தக் கட்டமைப்பு வங்கிகள் பொதுமக்களுக்கு இயல்பாக நடத்தும் சேவைகளுக்கு இடையூறு செய்வதை நோக்கமாகக் கொண்டதல்ல. தேனா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி, ஓரியண்டல் வர்த்தக வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 11 பொதுத்துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி பிசிஏ கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது.

     மக்களவையில் இன்று (16.03.2018) நிதித்துறை இணையமைச்சர் திரு ஷிவ்பிரகாஷ் சுக்லா கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

------



(Release ID: 1525223) Visitor Counter : 162


Read this release in: English