சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
அஜ்மீர் ஷெரீஃப் தர்காவுக்கு விஜயம் செய்த மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி பிரதமர் சார்பில் சத்தர் ஆடை வழங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAR 2018 12:18PM by PIB Chennai
அஜ்மீர் ஷெரீஃபில் உள்ள சூஃபி ஞானி ஹஸ்ரத் காஜா மொகிதீன் கிஸ்டி தர்காவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி சார்பில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி இன்று சத்தர் ஆடை வழங்கி பிரார்த்தனை செய்தார்.
806வது வருடாந்திர உரூஸ்சை முன்னிட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள காஜா மொகிதீன் கிஸ்டியை பின்பற்றுவோருக்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். “இந்தியாவைப் பற்றி வார்த்தைகளால் கூற இயலாது. அது உணரப்பட வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு சிந்தாந்தங்களில் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மையமாக உள்ளது. அவற்றில் சூஃபி ஒன்றாகும். இந்தியாவின் சூஃபி ஞானிகள் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களில் ஆன்மிகப் பாரம்பரியத்தின் குறியீடாக காஜா மொகிதீன் கிஸ்டி திகழ்கிறார். கரீப் நவாஸ் மனிதகுலத்திற்கு ஆற்றிய சேவை எதிர்காலத் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கம் அளிப்பதாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1525126)
வருகையாளர் எண்ணிக்கை : 238