குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அறிவு, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கைவினை போன்ற நுண்ம மூலக்கூறுகள் இல்லாமல் வாழ்க்கை முற்றுப்பெறாது: குடியரசுத் துணைத் தலைவர்

அதிகாரம் பெற்ற பெண்ணுக்கு ஒரு உதாரணம் டி.கே.பட்டம்மாள்
இசை ஒரு பிரபஞ்சத்தை இணைக்கும் சக்தி, அதற்கு எல்லைகள் ஏதுமில்லை
டி.கே. பட்டம்மாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 17 MAR 2018 3:28PM by PIB Chennai

அறிவு, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கைவினை போன்ற நுண்ம மூலக்கூறுகள் இல்லாமல் வாழ்க்கை முற்றுப்பெறாது என்று  குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கைய நாயுடு கூறியிருக்கிறார். சென்னையில் இன்று (17.03.2018) டி.கே. பட்டம்மாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், தமிழக மீன்வளத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்  துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நன்னெறிகள் விரைவாக மாறிவந்த சமயத்தில், பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதில், சமரசம் செய்து கொள்ளாத பட்டம்மாள், தனது கலை அர்ப்பணிப்பு, எதிர்பார்ப்பில்லாத கடமையுணர்வு, இசை நிகழ்ச்சிகளில் பாடல்களில் திறம்பட்ட தேர்வு ஆகியவற்றின் மூலம், மற்றவர்களிடையே உணர்ச்சியூட்டும் கலைஞராக விளங்கினார் என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். அதிகாரம் பெற்ற பெண்மணிக்கு ஓர் உதாரணமாக திகழ்ந்த அவர் இசையை உயிராகப் போற்றி, அவர் மதித்த நன்னெறிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார் என்றும் அவர் கூறினார். அனைத்து சமுதாய எதிர்ப்புகளுக்கும் இடையே தொழில்முறைப் பாடகர் என்ற பாதையை பட்டம்மாள் தேர்ந்தெடுத்தார் என்றும், அவர் எவ்விதமான முறையான குருகுலப் பயிற்சியும் இன்றி, தாமாகவே இசை பயின்றவர் என்றும் கூறினார்.

அவருக்கு இசையின்பால் குறிப்பிடத்தக்க ஆர்வம் இருந்தது என்றும், அதனால் செவ்வியல் இசையின் நெளிவு சுழிவுகளை அவர் எளிதாக புரிந்து கொண்டார் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். அவர் ஓர் இசைமேதை என்றும், இசை உலகுக்கு அவர் ஆற்றிய பங்கு, இசை விமர்சகர்களை நிறைவு செய்ததோடு மட்டுமன்றி, சாதாரண ரசிகனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது என்றும் கூறினார். இசை, பிரபஞ்சத்தை இணைக்கும் சக்தி என்றும், அதற்கு எல்லைகள் ஏதுமில்லை என்றும், பிணக்குகள் நிறைந்த இன்றைய உலகில், இசை அமைதியான மனநிலையை வழங்கமுடியும் என்றும் அவர் கூறினார்.

இந்திய செவ்வியல் இசை, குறிப்பாக, கர்நாடக இசை உயர் எண்ணங்களையும், நெறிப்படுத்தும் உணர்வுகளையும், மென்மையான இசைக்குறிப்புகளையும், இணைப்பு தெரியாத ஆனந்த அனுபவமாக நெய்து விடுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இந்தக் கலவை பாராட்டப்பட வேண்டும்இந்தப் பண்பாட்டுப் பாரம்பரியமும், ஒருங்கிணைந்த முழுமையான வாழ்க்கை பற்றிய நெடுநோக்கும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று அவர் கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவரின் முழுமையான உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

 

--------


(रिलीज़ आईडी: 1525115) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी