நிதி அமைச்சகம்

ரயில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியாவும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 120 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 16 MAR 2018 6:07PM by PIB Chennai

இந்திய ரயில்வேயில் செயல்பாட்டு திறன் மேம்பாட்டுக்கென அதிக போக்குவரத்துள்ள வழித்தடங்களில் இரட்டைப்பாதை பணிகள் மற்றும் மின்மயமாக்கல் பணிகளை நிறைவு செய்ய 120 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் இன்று (16.03.2018) இந்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.

     ரயில்வே துறை முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிய வளர்ச்சி வங்கி  2011-ல் நிதி வழங்குவதற்கென ஏற்படுத்தப்பட்ட பல்தொகுப்பு நிதியான 500 மில்லியன் அமெரிக்க டாலரின் ஒரு பகுதியாக இந்த மூன்று தொகுப்பு கடன்கள் கையெழுத்திடப்பட்டன. இந்தக் கடன் தொகை தற்போது நடைபெற்று வரும் பணிகளை நிறைவு செய்வதற்கு பயன்படுத்தப்படும்.

     பொருளதார விவகாரங்கள் துறை இணை செயலாளர் திரு சமீர் குமார் காரே, இந்திய அரசின் சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய பங்கிட அலுவலக இயக்குனர் திரு கெனிச்சி யோகாயமாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இந்தத் திட்டம் ரயில் அடிப்படை கட்டமைப்பின் திறனை மின்மயமாக்கல், நவீன சிக்னல் அமைப்பை அறிமுகம் செய்தல், பாதைகளை இரட்டிப்பாக்குதல் மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம் மின்சார சிக்கனமான, பாதுகாப்பான, நம்பகமான, ரயில்வே அமைப்பை உருவாக்க உதவும்.  இதனால், பயண நேரம் குறைக்கப்பட்டு செயல்பாடு மற்றும் நிதி திறன் மேம்படும் என்று திரு காரே ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.


(रिलीज़ आईडी: 1524977) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी