சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளால் ஏற்படும் பரவா நோய்கள்
प्रविष्टि तिथि:
16 MAR 2018 3:23PM by PIB Chennai
சர்க்கரை, சோடியம் மற்றும் கொழுப்பு அதிகமாக உட்கொள்ளுதல் பரவா நோய்களை ஏற்படுத்தக்கூடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தகவல்படி அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது தொகுக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் இந்தியாவில் குறைவு.
மத்திய அரசு புற்றுநோய், நீரிழிவு நோய், இதயத்தசை நோய் மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய மருத்துவ இயக்கத்தின் கீ்ழ் தேசியத்திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் உதவி பெறும் பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து திறனை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
(रिलीज़ आईडी: 1524971)
आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English