சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 16 MAR 2018 3:16PM by PIB Chennai

அகில இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கிய தகவலின்படி 2017 செப்டம்பர் 30ம் தேதிவரை இந்தியாவில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மாநில மருத்துவ கவுன்சில்களில் மொத்தம் 10,41,395 அலோபதி மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். 80% இருப்பைப் பொறுத்து 8.33 லட்சம் மருத்துவர்கள் உரிய மருத்துவ சேவையில் பணியிலிருப்பார்கள் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தேசமாக 133 கோடி மக்கள் தொகையின்படி மருத்துவர் – பொதுமக்கள் விகிதாச்சாரம் 1 : 1596 ஆக உள்ளது.

     மத்திய அரசு அலோபதி மருத்துவர்களை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

     தமிழகத்தில் 2018 பிப்ரவரி 22ம் தேதி கணக்கின்படி 6850 இளநிலை மருத்துவ இடங்களும் 3089 முதுநிலை மருத்துவ இடங்களும் உள்ளன. ஜிப்மரில் 150 இளநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.

     மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.


(रिलीज़ आईडी: 1524968) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English