சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கான தகுதித்தேர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAR 2018 3:13PM by PIB Chennai

இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 பிரிவு 13(4B) படி வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் சேரவிரும்பும் இந்திய மாணவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். மேலும் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் நிரந்தர அல்லது தற்காலிகமாக இந்திய மருத்துவ கவுன்சிலிடமோ அல்லது மாநில மருத்துவ கவுன்சிலிடமோ பதிவு செய்ய விரும்புவோரும் இதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதன்படி அகில இந்திய மருத்துவ கவுன்சில் மத்திய அரசின் அனுமதியுடன் மருத்துவ தகுதித் தேர்வு விதிமுறைகள் 2002 மற்றும்  வெளிநாட்டு மருத்துவ கல்வி நிறுவனங்களில் இளநிலை மருத்துவப்பட்டம் சேர்வதற்காக தகுதியை தீர்மானிக்கவும் வெளிநாடு மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் 2002லும் திருத்தம் செய்துள்ளது. இதன்படி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பயில தேசிய தகுதி மற்றும் மருத்துவ சேர்க்கை நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வின் முடிவுகள் 1997 மருத்துவ பட்டப்படிப்புகள் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ இளநிலை பட்டப்படிப்பிற்கு குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதியைப் பெற்றிருக்கும் பட்சத்தில் இதுபோன்ற நபர்களுக்கு தகுதிச்சான்றாக கருதப்படும்.

    

     மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின் அம்சங்கள் 2018 மே மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உரிய தகுதிச்சான்றுகள் பெற்று வெளிநாடுகளில் அடிப்படை மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேசிய நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

     மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.gov.in பார்க்கவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1524965) வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க: English