சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

Posted On: 16 MAR 2018 3:13PM by PIB Chennai

பூச்சிக்கொல்லி மருந்து கலந்த காற்றை சுவாசித்ததால், மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் 2015-16 முதல் 2017-18 வரையில் ஏற்பட்ட மரணங்களின் விவரத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

     இதன்படி, தமிழ்நாட்டில் 2017-18-ல் மூன்று பேர் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக பயன்படுத்திய காரணத்துக்காகவும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததாலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் 2015-16 மற்றும் 2016-17 ஆகியவற்றுக்கான இத்தகைய மரணங்கள் குறித்த விவரம் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகத்திடம் இல்லை.

     இத்தகைய மரணங்களைத் தவிர்க்க மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

     மக்களவையில் இன்று (16.03.2018) கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

------

 


(Release ID: 1524904) Visitor Counter : 162


Read this release in: English