நீர்வளத் துறை அமைச்சகம்

அதல் பூஜல் திட்டம்

Posted On: 15 MAR 2018 3:45PM by PIB Chennai

நிலத்தடி நீர் அதிகம் எடுக்கப்பட்டுவிட்ட மற்றும் நிலத்தடி நீர் குறைவாக உள்ள குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களின் பகுதிகளில் நிலைத்த நிலத்தடி நீர் மேலாண்மையை நோக்கமாகக் கொண்டு சமுதாயப் பங்களிப்புடன் அதல் பூஜல் திட்டத்தை (ஏபிஹெச்ஒய்) செயல்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.  ஏபிஹெச்ஒய் மத்திய அரசு திட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   இத்திட்டம் உலக வங்கி உதவியுடன் அமல்படுத்தப்படும்.

     2013 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் மாநில நிலத்தடி நீர் துறைகள் நடத்திய இயக்க நிலத்தடி நீர் ஆதாரங்கள் மதிப்பீட்டின்படி, மொத்தம் 6,584 மதிப்பீடு பிரிவுகளில் (ஒன்றியங்கள் / வட்டங்கள் / மண்டல்கள் / பாசனப்பரப்பு / ஃபிர்கா) 1,034 பிரிவுகள் மிக அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

     தமிழ்நாட்டில் மொத்தம் 1,139 மதிப்பீடு செய்யப்பட்ட பிரிவுகளில் 358-ல் 31 சதவீத நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுவிட்டது தெரியவந்துள்ளது.

     தண்ணீர் என்ற பொருள் மாநில அரசுகள் பட்டியலில் வருவதால், நீர் ஆதாரங்களை மேம்படுத்தி, பாதுகாத்து, திறம்பட நிர்வகித்து, நிலைத்தத் தன்மையையும், தண்ணீர் கிடைக்கும் நிலையையும் உறுதி செய்வது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முக்கிய நடவடிக்கையாகும்,

     மக்களவையில் இன்று (15,03,2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.

------


(Release ID: 1524699)
Read this release in: English