சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

எதிர்காலத்தில் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் அம்சங்கள்

Posted On: 15 MAR 2018 3:22PM by PIB Chennai

சாலைப் பாதுகாப்புக்காக எதிர்காலத்தில் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் நிபந்தனைகள் கொண்ட ஜிஎஸ்ஆர் 1483 (இ) எண்ணுள்ள ஓர் அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2017, டிசம்பர் 7ம் தேதி வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிக்கையின்படி வரும் 2019ம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியும் அதற்குப் பிறகும் உற்பத்தி செய்யப்படும் எம்1 ரக வாகனங்கள் எனப்படும் (Motor vehicles of category M1) நான்கு சக்கர வாகனங்களில் சில பாதுகாப்பு அம்சங்களைக் கட்டாயமாக இடம்பெறச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களில் இருக்கை பெல்ட் அணிவதற்கு நினைவூட்டும் வசதி, ஓட்டுபவரே வாகனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அம்சம், வேகத்தை மீறும்போது எச்சரிக்கும் கருவி, வாகனத்தைப் பின்புறமாக ஓட்டும்போது, அதை உணர்த்தும் சென்சர் (Vehicle Reverse Gear Sensor) ஆகியவை கட்டாயமாக்கப்படும். இந்த நிபந்தனைகள் தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தப்பட்டு வரும் வாகனத் தொழில் தர நிர்ணயத்தில் (Automotive Industry Standard 145-2017) குறிப்பிட்டுள்ளபடி கட்டாயமாக்கப்படும்.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சாலை சட்ட விதிகளின் கீழ் ஓர் அறிவிக்கை (G.S.R 634(E)) 23.6.2017ம் தேதியன்று பிறப்பித்திருந்தது. அதில் உள்ள விதிகள் பாதுகாப்பான பயணத்துக்கும் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும் வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றன.

இத்தகவல்களை மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் திரு மனுஷ்க் லால் மாண்டவ்யா இன்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

****



(Release ID: 1524634) Visitor Counter : 127


Read this release in: English