உள்துறை அமைச்சகம்

உலகளாவிய பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு நீடித்த ஒருமித்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2018 8:36PM by PIB Chennai

மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தீவிரவாதத்தில் ஈடுபடுத்துவது தற்போது உலகில் இன்னொரு போக்காக இருக்கிறது. மேலும், அது உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகவும் இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

குருகிராமில் இன்று (மார்ச் 14) “உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் முறையில்  மாற்றம்என்ற தலைப்பில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு குறித்த நான்காவது மாநாட்டில் பேசிய அவர், “இந்தப் பிரச்சினையைப் பல நாடுகள் அடையாளம் கண்டுகொண்டுள்ளன. தீவிரவாதமயமாக்கலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்தியா சரியான தருணத்தில் சில வழிமுறைகளை வகுத்துள்ளது என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியதாவது:

பயங்கரவாதம் உலக அளவிலான பிரச்சினை ஆகிவிட்டது. சர்வதேச அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகிவிட்டது. இணையவெளி உட்பட மேம்பட்டுவிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள், உலக அளவிலான நிதி, அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், ராணுவம் பயன்படுத்துவதற்கு இணையான ஆயுதங்கள் ஆகியவை அந்தச் சக்திகளுக்கு ஏராளமான வலிமையை அளித்துவிட்டன. ஆகையால், பயங்கரவாதம் உலக அளவிலும் மண்டல அளவிலும் தேசிய அளவிலும் பெரிய சவால்களில் ஒன்றாக பயங்கரவாதம்  நீடிக்கிறது என்பதில் வியப்பில்லை. அதனால்தான், தேசிய அளவில் பாதுகாப்புத் திட்டங்களை வகுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணியாகிவிட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் முக்கிய நாடுகளுடன் இணைந்து இந்தியா கூட்டுப் பணிக் குழுக்களை (Joint Working Groups) அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, பல நாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவிக்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் (Bilateral treaties on Mutual Legal Assistance-MLATs) கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ்  குற்றச் சம்பவங்களில் புலன் விசாரணை மேற்கொள்ளவும் ஆதாரங்களைத் திரட்டவும் சாட்சிகளை பரிமாறிக் கொள்ளவும் செய்யலாம். மேலும், குற்றச் செயல்களையு அவற்றுக்கான வருமானம் கிடைப்பதையும் முறியடிக்கவும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

 

 

********************


(வெளியீட்டு அடையாள எண்: 1524574) வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க: English