பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

நடைமுறையில் உள்ள யூரியா மானியத் திட்டத்தை 12-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்கும் அப்பாற்பட்டு நீடிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 14 MAR 2018 7:03PM by PIB Chennai

நடைமுறையில்  உள்ள யூரியா மானியத் திட்டத்தை 12-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்கும் அப்பாற்பட்டு 2019-20 வரை நீடிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. மத்திய உரங்கள் துறையின் திட்டமான இந்த உர மானிய விநியோகத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1,64,935 கோடியாகும்.  இந்த முடிவு 2020 வரை யூரியா விலையில் ஏற்றம் ஏதும் இருக்காது என்ற அனுமானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்:

     யூரியா மானிய விலைத் திட்டம் உரங்கள் துறையின் மத்திய உதவியுடன் கூடிய திட்டத்தின் ஒரு பகுதியாக 2017 ஏப்ரல் ஒன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினம் முழுவதையும் மத்திய அரசு பட்ஜெட் மூலம் ஏற்றுக்கொள்கிறது. யூரியா மானியத் திட்ட அமலை தொடர்வதால், யூரியா தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் மானியத்தொகை சென்று சேருவது உறுதி செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு யூரியா உரிய காலத்தில் கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது.

பின்னணி:

     உணவு தானிய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைவதில் ரசாயன உரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றனஇந்தியாவின் விவசாய வளர்ச்சிக்கு அவை மிக இன்றியமையாதவைதொடர்ச்சியான, நிலைத்த வேளாண் வளர்ச்சிக்கும் சமச்சீர் ஊட்டச்சத்து அளிப்பதை மேம்படுத்துவதற்கும் விவசாயிகளுக்கு யூரியா உரம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட அதாவது, தற்போது மெட்ரிக் டன்னுக்கு ரூ.5360 விலையில் (யூரியா மீது வேப்பெண்ணெய் பூச்சு கொடுப்பதற்கான கட்டணங்கள், மத்திய / மாநில வரிகள் நீங்கலாக) கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்

-----



(Release ID: 1524549) Visitor Counter : 328


Read this release in: English