குடியரசுத் தலைவர் செயலகம்

இந்தியக் குடியரசுத் தலைவர் மடகாஸ்கருக்கு சென்றார் இந்நாட்டிற்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் முதலாவது பயணமாகும் இது

Posted On: 14 MAR 2018 10:13PM by PIB Chennai

ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியின் இரண்டு நாடுகளின் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இரண்டாம் கட்டப் பயணமாக இன்று (14.03.2018) மடகாஸ்கருக்கு சென்றார். ந்நாட்டிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் மேற்கொள்ளும்  முதலாவது பயணமாகும் இது.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் மடகாஸ்கர் அதிபர் திரு ஹெரி ரஜோனரிமம்பியானினா-வுடன் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினார். பாதுகாப்பு ஒத்துழைப்பு, விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பு என இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டதை அவர் பார்வையிட்டார். தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைக்குப் பின் குடியரசுத் தலைவருக்கு மடகாஸ்கர் அதிபரால் கிராண்ட் கிராஸ் இரண்டாம் நிலை விருது வழங்கப்பட்டது. அந்நாட்டின் குடிமகன் அல்லாத ஒருவருக்கு மடகாஸ்கர் வழங்கும் மிக உயரிய கவுரவமாகும் இது. இந்த கவுரவத்திற்காக மடகாஸ்கர் அரசுக்கு குடியரசுத்தலைவர் நன்றி தெரிவித்தார். இந்த சிறப்பு செயல் நமது இணக்கமான நட்புறவுகளை நீண்ட காலத்திற்கும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியக் கப்பல்கள் நட்பு ரீதியாக மடகாஸ்கருக்கு வருவதற்கும் மடகாஸ்கர்  ஊழியர்களின் திறன்வளர்ச்சி மற்றும் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.




(Release ID: 1524543) Visitor Counter : 208


Read this release in: English