மத்திய அமைச்சரவை

சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா-ஈரான் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 14 MAR 2018 6:55PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா – ஈரான் இடையே  செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018 பிப்ரவரி 17அன்று ஈரான் அதிபரின் இந்திய வருகையின்போது கையெழுத்தானது.

   இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இருநாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளை பலப்படுத்தவும் உதவும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:-

  1. மருத்துவர்களுக்கான பயிற்சி மற்றும் பிற சுகாதார வல்லுநர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
  2. மனிதவள மேம்பாடு மற்றும் சுகாதார சேவை வசதிகளை ஏற்படுத்துவதில் உதவி.
  3. மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஒழுங்குப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம்.
  4. மருத்துவ ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார்ந்த முன் முயற்சிகளில் ஒத்துழைப்பு.
  5. பொது சுகாதாரம், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு(SDGs), மற்றும் சர்வதேச சுகாதார ஒத்துழைப்பு; மற்றும்
  6. இருதரப்பும் ஒப்புக்கொண்ட பிற துறைகளில் ஒத்துழைப்பு.

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும், ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயவும், செயல்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

=============



(Release ID: 1524472) Visitor Counter : 129