ரெயில்வே அமைச்சகம்
ரயில்நிலையங்களில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல்
प्रविष्टि तिथि:
14 MAR 2018 5:16PM by PIB Chennai
அனைத்து ஏ1, ஏ மற்றும் சி பிரிவு ரயில்நிலையங்களில் (சி பிரிவு ரயில்நிலையங்களில் 25,000 மற்றும் அதற்குமேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் ரயில்நிலையங்கள்) நகரும் படிக்கட்டுகளையும், ஏ1, ஏ மற்றம் சி பிரிவு ரயில்நிலையங்கள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரயில்நிலையங்களில் படிப்படியாக மின்தூக்கிகளை அமைக்கவும் ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, கூடுதலாக 2,589 நகரும் படிக்கட்டுகள் மற்றும் ஆயிரம் மின்தூக்கிகள் பல்வேறு ரயில்நிலையங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை, 171 ரயில்நிலையங்களில், 473 நகரும் படிக்கட்டுகளும், 137 ரயில்நிலையங்களில் 330 மின்தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 128 ரயில்நிலையங்களில் 308 நகரும் படிக்கட்டுகளும், 97 ரயில்நிலையங்களில் 306 மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த மண்டல வாரியான விவரம் வருமாறு:
மண்டல ரயில்வே வாரியாக மின்தூக்கிகள் & நகரும் படிக்கட்டுகள்
|
வ,எ
|
ரயில்வே மண்டலம்
|
நகரும் படிக்கட்டுகள் எண்ணிக்கை
|
ரயில்நிலையங்களின் எண்ணிக்கை
|
மின்தூக்கிகள் எண்ணிக்கை
|
ரயில்நிலையங்கள் எண்ணிக்கை
|
|
01
|
தெற்கு ரயில்வே
|
87
|
34
|
59
|
28
|
|
02
|
தென் மத்திய ரயில்வே
|
42
|
15
|
49
|
20
|
|
03
|
தென்மேற்கு ரயில்வே
|
13
|
4
|
12
|
3
|
மக்களவையில் இன்று(14.03.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த ரயில்வே இணையமைச்சர் திரு.ராஜன் கோஹெயின் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
==========
(रिलीज़ आईडी: 1524437)
आगंतुक पटल : 96
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English