தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

Posted On: 14 MAR 2018 4:18PM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் விளம்பரம் மற்றும் காட்சி இயக்குனரகம் விளம்பரத்துறை, களவிளம்பர இயக்குனரகம், இசை மற்றும் நாடகப் பிரிவு ஆகியவற்றை புதிதாக ஏற்படுத்தப்படும் எல்லை கடந்த தகவல் தொடர்பு பிரிவுடன் இணைப்பது தொடர்பான திட்டச்சார்புகள் குறித்த ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

      விளம்பரம் மற்றும் காட்சி இயக்குனரகம் களவிளம்பர இயக்குனரகம், மற்றும் இசை மற்றும் நாடகப் பிரிவு ஆகியவற்றை எல்லை கடந்த தகவல் தொடர்பு பிரிவுடன் இணைப்பது குறித்து இக்குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். பல்வேறு ஊடகப் பிரிவுகளை இணைப்பதன் மூலம் எவ்வாறு ஒருங்கிணைந்த ஊடக மேலாண்மையை சிறந்த முறையில் கையாளலாம் என்பது குறித்து அமைச்சர் உறுப்பினர்களுக்கு விளக்கினார். இத்தகைய நடவடிக்கைகள் மனிதவளம் மற்றும் விரிவாக்க செலவுகளை எவ்வாறு குறைக்க இயலும் என்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

      இந்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், தகவல் தொடர்பை அனைத்து தரப்பிற்கும் எடுத்துச் செல்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் சிறந்த பங்காற்றும் என்றும் கூறினர். ஊடகப் பிரிவுகளை ஒருங்கிணைத்ததால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்றும், இதன்மூலம் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வழி ஏற்படும் என்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணைச்செயலளர் திரு சஞ்சய் மூர்த்தி, அமைச்சகத்தின் சார்பில் இந்த மூன்று ஊடகப் பிரிவுகளையும், எல்லை கடந்த தகவல் தொடர்பு பிரிவுடன் இணைப்பது தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார்.  

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தில் பார்க்கவும்



(Release ID: 1524416) Visitor Counter : 169


Read this release in: English