பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

மறைந்து வரும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மட்டுமே இருக்க முடியும்: இதுவரை 161 மறைந்து வரும் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

Posted On: 13 MAR 2018 7:10PM by PIB Chennai

1992ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பங்குகளை பொது விற்பனைசெய்த பிறகு மறைந்து விட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கென ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளின் நடவடிக்கைகள் காரணமாக மறைந்துவிட்ட நிறுவனங்கள் என அடையாளம் காணப்பட்ட 238 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 161 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 77 நிறுவனங்கள் தொடர்ந்து மறைந்துவிட்ட நிறுவனங்கள் பட்டியலிலேயே உள்ளன. இத்தகைய நிறுவனங்கள், அவற்றின் இயக்குநர்கள் ஆகியோருக்கு எதிராக கம்பெனிச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று (13.3.2018) கம்பெனி விவகாரங்கள் மற்றும் சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு பி பி சவ்தாரி இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்

                                ---


(Release ID: 1524389) Visitor Counter : 107
Read this release in: English