குடியரசுத் தலைவர் செயலகம்

உலக ஹிந்தி செயலகத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் :மொரீஷியஸில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார்: மொரீஷியஸில் அவர்களது சாதனைக்காக பாராட்டினார்

प्रविष्टि तिथि: 13 MAR 2018 7:10PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மொரீஷியஸில் தனது  மூன்றாம் நாள் பயணத்தின்போது இன்று (13.3.2018) உலக ஹிந்தி செயலகத்தை தொடங்கி வைத்தார். இந்த செயலகத்தின் சின்னத்தையும், முன்பருவ டிஜிட்டல் கற்றல் திட்டத்தையும், சமூக வீட்டு வசதி திட்டத்தையும், இந்தியர்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட பெரிய இஎன்டி மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்தியாவிலும் மொரீஷியஸிலும் ஹிந்தி மொழி சமுதாய, பண்பாட்டில் முக்கிய பங்காற்றி இருப்பதாகக் கூறினார். ஹிந்தி ஒர் உலக மொழி என்றும், உலகெங்கும் பரவியுள்ள இந்திய சமுதாயத்தினர் ஹிந்தி உள்ளிட்ட மொழி பாரம்பரியத்தின் மூலம் அதன் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதனை அடுத்த சந்ததிக்கு வழங்கியுள்ளனர் என்று கூறினார். பல்வேறு நாடுகளில் 175 பல்கலைக்கழகங்களில் ஹிந்தி மொழி போதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

2018 ஆகஸ்டில் மொரீஷியஸ் நாட்டில் 11ஆவது உலக ஹிந்தி மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா தவிர இந்த மாநாடு மூன்றாம் முறையாக நடைபெறும் ஒரே நாடு மொரீஷியஸ்தான் என்றார் அவர். மொரீஷியஸ் மக்கள் ஹிந்தி மொழியின் மீது காட்டும் அன்புக்கு இதுவே அத்தாட்சி என்றார்.

பின்னர் மொரீஷியஸில் உள்ள இந்திய ஹைகமிஷ்னர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், நமது சகோதர,சகோதரிகள் இந்தியாவை விட்டு பல தலைமுறைகளுக்கு முன்னதாகவே நீங்கிவந்து பெரிய அளவில் சொத்துக்களைத் தேடி வெற்றியடைந்து அதே சமயம் தங்கள் ஆன்மீக நெறிகளை பாதுகாத்து வந்திருப்பது இந்தியாவில் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார். நினைவு தெரிந்த காலம் முதல் இந்திய சமுதாயமும் வாழ்க்கையும் மொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற பொருள் கொண்ட ‘வசுதெய்வ குடும்பகம்’  என்ற தத்துவத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாம் ரத்தமும் வியர்வையும் கலந்த உறவுகள் கொண்டுள்ள மொரீஷியஸூக்கு இந்த தத்துவம் மேலும் பொருத்தமுடையது என்றார்.

 இன்றைய நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தியா வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருடன் தொடர்புகொள்ள விரும்புகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த வகையில் எமது வெளிநாடுகளில் உள்ள குடிமக்கள் எனப் பொருள்படும் ஓசிஐ திட்டத்தில் மொரீஷியஸூக்கு சிறப்புப் பிரிவுகள் ஏற்பாடு செய்துள்ளோம். தில்லியில் நடைபெறும் பிரவாஸி பாரதிய மைய திட்டங்களில் பங்கேற்க வருமாறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். மொரீஷியஸில் உள்ள இளைய தலைமுறையினர் இந்த மையத்துடன் தொடர்பு  கொள்ளத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். நமது வெளிநாடுவாழ் இந்தியர்கள் கட்டமைப்பையும் மேடைகளையும் இந்தியாவுடனும் உலகின் இதரப்பகுதிகளில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ள பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக இன்று காலை மொரீஷியஸின் முன்னாள் பிரதமர்கள் திரு பால் பெரிங்கர், திரு நவீன் ராம்கூலம் ஆகியோர் தனித்தனியாக குடியரசுத்தலைவரை சந்தித்துப் பேசினார்கள். நாளை (14.03.2018) குடியரசுத் தலைவர் தமது இரண்டு நாடுகள் பயணத்தின் நிறைவாக மடகாஸ்கர் புறப்பட்டுச் செல்கிறார். மடகாஸ்கருக்கு செல்லும் முதலாவது இந்திய குடியரசுத்தலைவர் ஆகிறார் அவர்.

                                ----


(रिलीज़ आईडी: 1524387) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu