சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2018 6:00PM by PIB Chennai

தேசிய ஸ்வஸ்தியா காப்பீடுத் திட்டத்திற்கு 2018 – 19 ஆம் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, தேசிய ஸ்வஸ்தியா காப்பீடுத் திட்டம் அதனுடன் இணைக்கப்படும். இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு ஏதுமிருந்தால் மறு மதிப்பீட்டு சமயத்தில் அது சரிக்கட்டப்படும்.

  2018-19ல் சுகாதாரத்திற்கு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.1249.15 கோடி என்ற சிறிய அளவு உயர்வு 2017-18 மறுமதிப்பீட்டை ஒப்பிடும்போது ஏற்பட்டுள்ளது.

  மாநிலங்களவையில் இன்று (13.3.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்ரியா பட்டேல் இத்தகவலைத் தெரிவித்தார்.

===========


(வெளியீட்டு அடையாள எண்: 1524386) வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க: English