மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
அரசின் பல்வேறு நலத்திட்டங்களின்படி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள கழிப்பறை கட்டமைப்புகள்
Posted On:
12 MAR 2018 5:48PM by PIB Chennai
அரசியல் சாசனப் பிரிவு 19-ன்படி, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்-2009 பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதி மற்றும் விதிமுறைகளை வழங்குகிறது. இதன்படி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட அரசுகள் பள்ளிகளில் கழிப்பறை வசதியுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தித் தருவது கட்டாயமாகும். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2009-ன் கீழ், அனைத்து பள்ளிக் கட்டிடங்களும், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகளை கொண்டிருக்க வேண்டும் போன்ற தகவல்களை வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் மாணவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, பள்ளிகளில் கழிப்பறைகள் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பள்ளிகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடிப்படை கல்விக்கான அனைவருக்குமான கட்டாய கல்வித் திட்டம் மற்றும் நடுநிலை கல்விக்கான தேசிய நடுநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் கீழ், நாடுமுழுவதிலும் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர உதவிவருகிறது.
அனைவருக்குமான கட்டாய கல்வித் திட்டம்-2001 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது முதல் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி வரை, அடிப்படைக் கல்விக்கான மழலையர் பள்ளிகளில் 10.54 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 9.95 லட்சம் கழிப்பறைகள் மாநில அல்லது சம்பந்தப்பட்ட யூனியன் பிரதேசங்களால் கட்டப்பட்டுள்ளது. தேசிய நடுநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ், திட்டம் அமல்படுத்தப்பட்ட 2009-10 ஆம் ஆண்டு முதல் 2018 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதிவரை நடுநிலைப் பள்ளிகளில் 70,244 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுள் சம்பந்தப்பட்ட மாநில யூனியன் பிரதேசங்கள் சார்பில் 49,636 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், அனைவருக்குமான கட்டாயக் கல்வித் திட்டம் தேசிய நடுநிலை கல்வித் திட்டத்தின்படி, கடந்த மூன்றாண்டுகளில் நாடுமுழுவதிலும் உள்ள அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பறை கட்டும் திட்டத்திற்காக முறையே ரூ.920.91 கோடி மற்றும் ரூ.46.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு. உபேந்திர கோஷுவாகா மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.
(Release ID: 1524119)
Visitor Counter : 130