குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஊரக அஞ்சல் கட்டமைப்பை மறுவடிவமைத்து வலிமைப்படுத்தி அவற்றை விநியோக மற்றும் சரக்கு போக்குவரத்து தொகுப்பாக ஆக்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்

Posted On: 13 MAR 2018 12:22PM by PIB Chennai

ஊரக அஞ்சல் கட்டமைப்பை விநியோக மற்றும் சரக்கு போக்குவரத்து தொகுப்பாக ஆக்கும் வகையில் அதனை மறுவடிவமைத்து வலிமைப்படுத்த வேண்டும் என்று இந்திய அஞ்சல் சேவை அதிகாரிகளை இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். ரஃபி அஹமது கித்வாய் தேசிய அஞ்சல் அகாதமியில்  இன்று அவர் இந்திய அஞ்சல் சேவை பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்தியாவின் பழைமையான மற்றும் பரந்து விரிந்த சேவை கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பது குறித்து பெருமிதமடைய வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் கூறினார். பரந்து விரிந்த கிளைகளைக் கொண்ட அஞ்சல் அலுவலகங்கள் குறிப்பாக சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரிடையே அஞ்சல் சேமிப்பு திட்டங்களையும் காப்பீட்டு திட்டங்களையும் அளித்து நிதி உள்ளடக்க சவாலை எதிர்கொள்ள முடியும் என்றார். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் அதிகாரிகள் மாற்றத்திற்கான முகவர்களாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கிராமப்புற மக்களுக்கு ஏராளமான பயன்களைக் கொண்டு வந்து கிராமப்புறங்களில் உள்ள அஞ்சலகங்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையங்களாகவும் சில்லரை மையமாகவும் திகழ முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்திய மக்களுக்கு உலகத் தரமான சேவைகளை அளிக்க புதுமையாக சிந்திக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

***



(Release ID: 1524085) Visitor Counter : 131


Read this release in: English