ஜவுளித்துறை அமைச்சகம்

எச் டி ரகப் பருத்தியை சட்டவிரோதமாக சாகுபடி செய்வது பற்றி புலனாய்வு செய்யக் கள ஆய்வு மற்றும் அறிவியல் மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 12 MAR 2018 3:55PM by PIB Chennai

நாட்டில் எச் டி. அல்லது பி.ஜி-3 ரக பருத்தி சட்டவிரோதமாக சாகுபடி செய்வதை தடை செய்யுமாறு, ஏராளமான முறையீடுகள் வரப்பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு அஜய் தாம்தா, ஆந்திரா,  தெலங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் சட்டவிரோதமாகவோ, உரிய அனுமதியின்றியோ எச்.டி. ரகப் பருத்தி சாகுபடி செய்யப்படுவதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதுடன், புகார்களும் வரப்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். பி.ஜி-3 அல்லது ஹெச்.டி. ரக பருத்தி சாகுபடிக்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட மரபணு பொறியியல் ஒப்புதல் குழு அனுமதி அளிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தில் காணவும்.


(रिलीज़ आईडी: 1524065) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English