வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தங்கம் இறக்குமதி திட்டம் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2018 5:54PM by PIB Chennai

80:20 திட்டம் என்று அறியப்படும் தங்க இறக்குமதி திட்டம் குறித்து சில தவறான கருத்துக்கள் கடந்த சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். உண்மையான நிலை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

2012-13ல் நடப்புகணக்கு பற்றாக்குறை காரணமாகத் தங்க இறக்குமதியில் அழுத்தம் அதிகரித்தது. இந்த நிலையை சமாளிக்கத் தங்கம் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தல் தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தல் உட்பட   தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து முதலில் 22.7.2013 அன்றும் பின்னர் 14.8.2013 அன்றும் கட்டுப்பாடுகள் திருத்தியமைக்கப்பட்டு 20:80 என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில் குறைந்தபட்சம் 20% ஏற்றுமதிக்கு பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் வங்கிகளும், எம்எம்டிசி, எஸ்டிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் மட்டுமே 20:80 விதிமுறையின் கீழ் உள்நாட்டு பயன்பாட்டுக்காக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துதல் ஏற்றுமதிக் கடமையை கட்டாயப்படுத்துவதன் மூலம் அன்னியச் செலாவணியை  சேமித்தல் என்ற வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. தங்கத்தை கொள்முதல் செய்வது, விற்பது ஆகியவை பொதுத்துறை முகமைகளின் கைகளில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in.என்ன வலை தளத்தைப் பார்க்கவும்.

                                ----
 


(வெளியீட்டு அடையாள எண்: 1524061) வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க: English