பிரதமர் அலுவலகம்

“காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரை

Posted On: 13 MAR 2018 1:10PM by PIB Chennai

புது தில்லியில் நடைபெற்ற “காச நோயை ஒழிப்போம்மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

புது தில்லியில் நடைபெறும் “காச நோயை ஒழிப்போம்என்ற இந்த மாநாடு காச நோயை முற்றிலும் அகற்றும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நோயை ஒழிக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சியோடு தொடர்புடையது.

காச நோயை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என்று சர்வதேச இலக்கு உள்ள அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் அதனை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த இலக்கை அடைய மத்திய அரசு முழுமுயற்சி எடுத்து வருகிறது. இதில் மாநில அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. அதனால், அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கு நான் தனி தனியே இந்த இயக்கத்தில் சேருமாறு கேட்டு கடிதம் எழுதியுள்ளேன்.

காச நோயை ஒழிக்கும் இந்த போராட்டத்தில் முன்னணி காச நோய் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்த நோயில் இருந்து வெளியே வந்தவர்கள் மற்றவர்களுக்கு ஊக்கமாக திகழ்கின்றனர்.

குறிப்பிடப்பட்ட இலக்கை அடைய மத்திய அரசு எந்த வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் எடுத்துக்காட்டாக கூறினார்.



(Release ID: 1524056) Visitor Counter : 151