உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பினை திரு சுரேஷ் பிரபு ஏற்றுக்கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2018 4:46PM by PIB Chennai

இந்திய பொருளாதாரத்தின் விரைவாக வளர்ந்து வரும் துறைகளில் சிவில் விமானப் போக்குவரத்தும் ஒன்று. இன்று இந்த அமைச்சகத்துக்கு கூடுதல் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு இதனைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  விமானப்போக்குவரத்துத் துறையும் நமது திறந்த ஆகாய கொள்கை பெரிய அளவு வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது என்றும், இந்த வளர்ச்சியின் பயன்கள் விரைவில் ஏற்பட உள்ள கூடுதல்  வேலைவாய்ப்பு  பெருக்கத்தில் தெரியவரும் என்றார்.

   விமான இணைப்புகள் அதிகரித்து வருவதாலும் விமானக்கட்டணங்கள் மலிவாகி வருவதாலும்  சிறிய நகரங்களைச் சேர்ந்த இந்திய மக்கள் வேலைக்காகவும், விடுமுறைக்காகவும் விமானப்பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பாக குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் கூடுதலான விமானங்களுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.

    திறந்த ஆகாயம் என்பது சர்வதேச கொள்கை கருத்து ஆகும். சர்வதேச விமானப் போக்குவரத்துத் தொழிலில் குறிப்பாக வர்த்தக விமானப் போக்குவரத்தில் விதிகள் மற்றும் வரன்முறைகளை  தாராளமயமாக்குவதற்கு இந்தக் கொள்கை கருத்து அழைப்பு விடுக்கிறது. இதனால் விமான போக்குவரத்துத் தொழிலில் சுதந்திரமான சந்தைச் சூழ்நிலை உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது.

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1523907) வருகையாளர் எண்ணிக்கை : 149
இந்த வெளியீட்டை படிக்க: English