தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2017 ஏப்ரல்- ஜூன் காலாண்டின்போது 64000 வேலை வாய்ப்புகள் அதிகரித்தன

प्रविष्टि तिथि: 12 MAR 2018 2:26PM by PIB Chennai

விவசாயமல்லாத தொழிலியல் பொருளாதாரத்தில் அடுத்தடுத்த காலாண்டுகளில் வேலை வாய்ப்பு நிலவரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை 2016 ஏப்ரலில் தொடங்கிய தொழிலாளர் நல அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அளவீடு செய்கிறது. 2013  ஜனவரி முதல் 2014 ஏப்ரல் வரை நடத்தப்பட்ட 6-வது பொருளாதார கணக்கெடுப்பின்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 81 சதவீதத்தை உள்ளடக்கிய எட்டு பெரிய துறைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் 6-வது காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பில் 2017 ஏப்ரல்ஜூன் காலாண்டின்போது 64000 வேலைகள் கூடுதலாக ஏற்பட்டது என்று காணப்பட்டுள்ளதுமேலும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு 84000 அளவுக்கு குறைந்து போனதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனஇதற்கு பருவகால செயல்பாடுகளே காரணம் என்றும், பருவமழை காலத்தில் செங்கல் உற்பத்தி பிரிவுகளில் முக்கியமாக இந்த வேலைவாய்ப்புக் குறைவு ஏற்பட்டதே என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மக்களவையில் இன்று (12.3.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நல வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு சந்தோஷ்குமார் கங்குவார் இத்தகவலைத் தெரிவித்தார்.

--------


(रिलीज़ आईडी: 1523893) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English