பிரதமர் அலுவலகம்

பிரான்ஸ் அதிபரின் இந்திய வருகையொட்டி இந்திய – பிரான்ஸ் கூட்டறிக்கை (10, மார்ச் 2018)

Posted On: 10 MAR 2018 4:41PM by PIB Chennai
  1. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் குடியரசின் அதிபர் திரு. இமானுவேல் மேக்ரன் இந்தியாவுக்கு 2018,  மார்ச் 10ம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு தலைவர்களும் இணைந்து புது தில்லியில் 2018, மார்ச் 11ஆம் தேதி சர்வதேச சூரியசக்திக் கூட்டணி நாடுகளுக்கான உச்சி மாநாட்டை இணைந்து தொடங்கினர். இரு தலைவர்களும் விரிவான ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொண்டனர். அத்துடன், விவாதத்தில் மண்டல, சர்வதேச நிலைகளிலான பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்துவரும் இணைந்த செயல்பாடு குறித்தும் அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.
  2. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான ராஜதந்திரக் கூட்டின் 20ஆவது ஆண்டினையொட்டி, அதை இரு தலைவர்களும் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். இந்தியப் பிரதமர், பிரான்ஸ் குடியரசின் அதிபர் ஆகியோர் இடையில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை உச்சிமாநாட்டை நடத்துவது என்று இணங்குவதன் மூலம் அந்த உறவைப் புதிய நிலைக்கு எடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்தனர். இரு நாடுகளும் தங்களது கொள்கைகளைப் பகிர்வதன் அடிப்படையிலும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டம் மற்றும் மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் விழுமியங்களின் அடிப்படையிலும் இருதரப்பு உறவுகளை ஆழமாக்கவும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் இசைந்தனர்.
  3. முதல் உலகப் போரில் இந்திய, பிரான்ஸ் வீரர்கள் செய்த வீரமான தியாகங்களை நினைவுகூர்ந்த பிரதமர் திரு. மோடி, பாரிஸ் நகரில் 2018, நவம்பர் 11ம் தேதி நடைபெறும் முதல் உலகப் போரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் நிறைவில் இந்தியா பங்கேற்க வேண்டும் தனது விருப்பத்தை வெளியிட்டார். பாரிஸ் அமைதிப் பேரவை அமைப்பு பங்கேற்பதை வரவேற்பதாகவும் கூறினார். இந்த முயற்சியில் இந்தியா ஆதரவு தருவதற்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 
I.
ராஜதந்திரக் கூட்டு

 

  1. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் பாதுகாப்பான அல்லது வரையறுக்கப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், பரஸ்பரம் பாதுகாத்தல் குறித்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இத்தகைய உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த பரஸ்பர நம்பிக்கைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இரு நாடுகளும் ஆண்டுதோறும் பாதுகாப்பு குறித்த உரையாடலை அமைச்சர்கள் நிலையில் மேற்கொள்வது என்றும் இரு தரப்பினரும் இணங்கினர்.
  2. இந்தியப் பெருங்கடலில் கடல் போக்குவரத்தில் மேம்பட்ட ஒத்துழைப்புக்காக ஆழமான கருத்துப்பரிமாறலை உருவாக்குவதற்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்தக் கூட்டுக்கு வழிகாட்டியாக அமையும் “இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்திய – பிரான்ஸ் நாடுகளின் கூட்டு ராஜதந்திர தொலைநோக்கினை அவர்கள் வரவேற்றனர்.  சர்வதேச கடலில் தடையில்லாமல் வணிகத்திற்கும் தகவல்களுக்கும் பாதுகாப்பைப் பராமரிக்க இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று தலைவர்கள் உறுதிபடக் கூறினர். சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு கடல்வழி பயங்கரவாதத்தையும் கடற்கொள்ளையையும் எதிர்கொள்ள மண்டல, சர்வதேச எல்லையில் திறனை மேம்படுத்தவும், கடல்வழிப் பகுதி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது முக்கியம்.
  3. இந்திய, பிரான்ஸ் நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையில் தளவாடங்களின் போக்குவரத்து மற்றும் பகிர்தலுக்கு வழியமைக்கும் உடன்பாட்டை இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்றனர். இந்திய பிரான்ஸ் பாதுகாப்பு உறவில் ராஜதந்திர நிலையிலான ஆழத்துக்கும் பக்குவத்துக்கும் இந்த உடன்பாடு  அடையாளமாகத் திகழ்கிறது.
  4. இரு நாடுகளுக்கும் இடையில் வழக்கமான கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்வதன் அவசியத்தை இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர். பிரான்ஸ் நாட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரலில் வருணா கடற்படைக் கப்பல் வெற்றிகரமாக நடத்திய போர்ப் பயிற்சியையும் 2018, ஜனவரியில் பிரான்ஸில் சக்தி ஆயுதப் படையின் போர்ப் பயிற்சியையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். வரும் வாரங்களில் இந்தியாவில் வருணா கடற்படைப் பயிற்சியும் 2019ம் ஆண்டு பிரான்ஸில் கருடா போர் விமானத்தின் பயிற்சியும் நடத்தப்படுவதையும் இரு நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இரு நாடுகளின் ராணுவ கூட்டுப் பயிற்சி அளவை அதிகரிக்கும் நோக்கத்தை இரு தரப்பும் உறுதி செய்துள்ளன. இதே தரமான பயிற்சியை எதிர்காலத்திலும் பராமரிப்பது என்றும் உறுதிசெய்தன.
  5. 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமானம் குறித்த உடன்பாடு உள்பட   ஆயுதங்கள், தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் கால அட்டவணைப்படி முன்னேற்றம் ஏற்படுவது குறித்து இரு தலைவர்களும் திருப்தியை வெளிப்படுத்தினர். பிரான்ஸ் நாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து மாஸகோன் டாக் ஷிப்பில்டர்ஸ் லிட் நிறுவனம் உருவாக்கிய ஐஎன்எஸ் எனும் கல்வாரி முதல் நீர்மூழ்கிக் கப்பலின் இயக்கம் தொடங்கப்பட்டதை இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர்.
  6. பாதுகாப்புத் தளவாட உற்பத்தியின் விரிவாக்கம் தொடர்பான விவாதங்களை விரிவாகவும் ஆழமாகவும் தொடர்வதை இரு தலைவர்களும் எதிர்நோக்கியுள்ளனர். “இந்தியாவிலேயே உற்பத்தி செய்” என்ற முனைப்புத் திட்டம் இந்திய, பிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு அளிக்கும் என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இரு தரப்பு நலனுக்காக தகவல்களையும் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வது உள்பட இருவரும் இணைந்து இந்தியாவில் ராணுவக் கருவிகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் குறித்துப் பேசினர். இது விஷயத்தில் இந்திய பிரான்ஸ் கம்பெனிகளுக்கு இடையில் கூட்டுத் தொழில் முனைப்பு உருவாவதையும், புதிதாக உருவாக்குவதற்கு உறுதி எடுத்துக் கொள்வதையும் இரு தலைவர்கள் வரவேற்றனர்.
  7. போர்விமான என்ஜின் குறித்து இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (DRDO), பிரான்ஸ் நாட்டு சஃப்ரன் (SAFRAN) நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பேச்சுவார்த்தைகள் பற்றி இரு தலைவர்களும் தங்களது விவாதத்தில் குறிப்பிட்டனர். தேவையான நடவடிக்கைகள் எடுப்பதை ஊக்கப்படுத்தினர். பேச்சுகள் விரைவாக முடிவு காணவும் எதிர்பார்க்கிறார்கள்.
  8. இந்தியாவிலும் பிரான்ஸிலும் எல்லை கடந்த பயங்கரவாதம், பயங்கரவாதச் செயல்கள் உள்பட அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் இரு நாட்டுத் தலைவர்களும் கடுமையான கண்டனத்தை மீண்டும் உறுதி செய்தனர்.  காரணம் எதுவாக இருந்தாலும் மதம், சாதி, தேசியம், இனம், சிறுபான்மையினம் என எந்தக் காரணத்துக்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்று இரு தலைவர்களும் உறுதி செய்தனர். 2016ம் ஆண்டு ஜனவரியில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும் பயங்கரவாதத்தை எங்கு பார்த்தாலும் ஒழித்துக் கட்ட  உறுதி பூண்டனர். மேலும், பயங்கரவாதத்தின் வேரைப் பிடுங்கி எறியும் வகையில் பல செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் இசைவு தெரிவித்தனர்.  பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதையும் எதிர்கொள்வது குறித்து விவாதிக்க சர்வதேச கருத்தரங்கை பிரான்ஸ் நாட்டில் அந்நாட்டு அரசு 2018ம் ஆண்டு ஏப்ரல் நடத்துவதற்கும் இசைவு தெரிவித்தனர்.
  9. நமது பாதுகாப்பு, கட்டமைப்பிலிருந்து பயங்கரவாதத்தை வேரோடு அழித்து ஒழிக்க அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும்  அழைப்பு விடுத்தனர். பயங்கரவாத வலையத்தையும், அதற்கு நிதியுதவி செய்யும் வழிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். தெற்காசிய மண்டலத்திலும் சாஹெல் மண்டலத்திலும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்    அல்காய்தா, தேஷ்/ஐஎஸ்ஐஎஸ், ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் எல்லை கடந்த பயங்கரவாதத்தையும் முறியடிக்க வேண்டும்.
  10. இரு நாடுகளிலும் இயங்கும் இடையீட்டுப் படைகள் (NSG-GIGN), புலனாய்வு ஏஜென்சிகள் இடையிலான சிறந்த ஒத்துழைப்பைத் தொடர்வதுடன் பயங்கரவாத எதிர்ப்பு படைகளின் செயல்பாட்டில் உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு நாட்டுத் தலைவர்கள் இசைவு தெரிவித்தனர். அத்துடன் தீவிரமயமாவதை, குறிப்பாக இணையவழி பயங்கரவாதத்தை தடுத்து முறியடிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். ஐநா (UN), GCTF, FATF மற்றும் G20 போன்ற அமைப்புகளிலும் பயங்கரவாத எதிர்கொள்வதற்கு உடன்பட்டனர்.  அத்துடன், ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1267வது தீர்மானம் மற்றும் அது தொடர்பானவற்றை ஐ.நா.வில் இடம்பெற்றுள்ள எல்லா நாடுகளும் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டார். ஒருங்கிணைந்த சர்வதேச பயங்கரவாத மாநாட்டை ஐ.நா. மன்றத்தில்  நடத்துவது குறித்தும் இரு தலைவர்களும்  பேசிக் கொண்டனர்.
  11. இந்திய பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் கள்ளத்தனமாக போதைப் பொருட்கள் ரசாயனப் பொருட்களைக் கடத்துவதையும் பயன்படுத்துவதையும் தடுப்பதற்காகவும் இரு நாட்டுத் துறைகளுக்கு இடையில் வலுவான கருத்துப் பரிமாற்றத்துக்கும், பயங்கரவாதத்துக்குக் கடத்தப்படுவது, நிதியளிப்பது ஆகியவற்றைத் தடுப்பதற்கும்  ஓர் உடன்பாடு இறுதியாக்கப்பட்டதை இருவரும் வரவேற்றனர்.
  12. இந்தியாவிலும் பிரான்ஸிலும் அணுசக்தியை அமைதி வழிக்காகப் பயன்படுத்துவதை மேம்படுத்துவதற்கான 2008ம் ஆண்டு உடன்பாடு, இது குறித்த ஒத்துழைப்புக்கான 2016ம் ஆண்டு திட்டம் ஆகியவை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். அத்துடன், மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் ஆறு அணுசக்தி ஈனுலைகளை அமைப்பதற்காக தேசிய மின்கழகம் (NPCIL) மற்றும் ஐரோப்பாவின் EDF நிறுவனம் இடையில் உடன்பாடு அமைவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்
  13. ஜெய்தாபூரில் பணிகள் 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்படுவதை இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி செய்தனர்.  தேசிய மின் கழகமும் ஈடிஎப் (EDF) நிறுவனமும் இது தொடர்பான ஒப்பந்தம் குறித்த விவாதங்களை ஊக்குவித்தனர். ஜெய்தாபூரில் அணு மின்நிலையம் பூர்த்தியடைந்தால், 9.6 கிகா வாட்ஸ் திறன் கொண்டதாக, உலகிலேயே மிகப் பெரிய உற்பத்தி நிலையமாக இருக்கும்.  மின் உற்பத்தியில் 2030ம் ஆண்டில் மரபுசாரா மின் உற்பத்தியின் பங்கு 40 சதவீதத்தை எட்டுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெய்தாபூர் ஆலையின் உற்பத்தியை அடுத்து புதுப்பிக்கத் தக்க மின் சக்தியுடன் சேர்த்து அந்த இலக்கு எட்டப்படும். இந்நிலையில், பிரான்ஸ் தரப்பிலிருந்து செலவு குறைந்த மின் உற்பத்திக்கான தேவை வலியுறுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து வாழ்நாள் முழுவதும்  நம்பகத் தன்மையுள்ள தடையற்ற, தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் ஜெய்தாபூர் அணுசக்தி ஆலையிலிருந்து கிடைக்கவும் தொழில்நுட்ப மாற்றத்துக்கான ஒத்துழைப்பு, செலவு குறைந்த உள்ளூர் இடுபொருட்கள் உற்பத்தி கிடைக்க உறுதி செய்யப்பட்டது.   தொழில்நுட்பம் மீதான உரிமைகளை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
  14. இந்திய விதிகளை அமல்படுத்துவது, அணுநிலையத்தில் சேதம் நேர்ந்தால், சமூகத்திற்குப்  பதிலளிக்க வேண்டிய பொறுப்பை வலியுறுத்தும் 2010ம் ஆண்டு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act 2010) ஜெய்தாபூர் ஆலைக்கும் அமல்படுத்துவது என்பது குறித்த புரிதலைப் பகிர்ந்து கொள்வதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.  அணு விபத்துக்கான மக்கள் பொறுப்புணர்வு சட்டம் (2010), அதன் விதிகள், சேதம் நேர்ந்தால் அளிக்கப்படும் கூடுதல் இழப்பீடு அளிப்பது குறித்த மாநாட்டில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் புரிதல் அமைந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் இரு நாடுகளின் அணு மின்சக்தி அமைப்புகளும் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டியதை வரவேற்றனர். இரு தரப்பு பரஸ்பரம் பயன்தரும் அறிவியல் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளையும் வரவேற்றனர். மத்திய பிரெஞ்ச் அணுசக்தி, மாற்று மின்சக்தி ஆணையம் (CEA) அணு அறிவியல், தொழில்நுட்ப தேசிய நிறுவனம் (INSTN) இடையிலான ஒத்துழைப்பு, இந்தியாவின் அணுசக்தித் துறை (DAE) அணுசக்திக் கூட்டாண்மைக்கான உலக மையம் (GCNEP) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை இரு தரப்புத் தலைவர்களும் வரவேற்றனர்.
  15. இரு நாடுகளும் தங்களது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு இடையிலான தொடர் கருத்துப் பரிமாற்றங்களையும் நீண்டகால நல்லுறவையும் பாராட்டினர். இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB), பிரான்ஸ் நாட்டின் ஏஎஸ்என் (ASN) நிறுவனம் ஆகியவை அணு பாதுகாப்பு, ஒழுங்குமுறை தொடர்பாக தங்களது நல்ல அனுபவங்கள், செயல்பாடுகள் மேம்பாடுகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதையும் இரு தலைவர்கள் பாராட்டினர்.

    விண்வெளி ஒத்துழைப்பு

 

  1. பொது விண்வெளித் துறையைப் பொறுத்தவரையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க, வலிமை மிக்க தொடர்புகளை வரவேற்ற இரு நாட்டுத் தலைவர்களும் “விண்வெளி ஒத்துழைப்புக்கான இந்திய – பிரான்ஸ் கூட்டுத் தொலைநோக்கு” குறித்தும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆக்கப்பூர்வமான நிலைப்பாடுகளையும் குறிப்பிட்டனர். குறிப்பாக, சூழல் காப்பு, நீர்ப் பயன்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்கும் மூன்றாவது கூட்டு செயற்கைக்கோள் திட்டமான “த்ரிஷ்ணா” (TRISHNA) குறித்தும் இந்தியாவின் கடல்சார் செயற்கைக்கோளான “ஓஷன்சாட்-3” (OCEANSAT-3) செயற்கைக் கோள் தொடர்பாகவும் தற்போதைய ஒத்துழைப்பை அங்கீகரித்தனர்.

    II. பொருளாதாரம், கல்வி, அறிவியல்-தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் மக்களிடை ஒத்துழைப்பு

 

  1. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள ஆழமான உறவு, குறிப்பாக பொருளாதாரம், கல்வி, அறிவியல், கலாசாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் உள்ள உறவு குறித்து பிரதமர் திரு. மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு. மெக்ரோனும் திருப்தி தெரிவித்தனர்.
  2. மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் குடிபெயர்தல், போக்கு வரவு மேற்கொள்ள வழியமைப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் சென்று வரவும், குடியேறவும் உள்ள நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கான பரஸ்பர ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவதை இருவரும் வரவேற்றனர்.
  3. இரு நாடுகளும் தங்களது கலாசாரத்தைப் பரஸ்பரம் புரிந்துகொள்வதற்காக  பல்வேறு துறை மக்களைப் பரிமாறிக் கொள்ளும் திட்டம், குறிப்பாக மாணவர்கள் இடையிலான பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான அவசியத்தை பிரதமர் மோடியும், அதிபர் மெக்ரோனும் பாராட்டினர். இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டின் முனைப்புத் திட்டமான “எதிர்காலத்துக்கான பிரான்ஸ் – இந்தியா திட்டம்” (France-India Programme for the Future) குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவிக்கப்படுகிறது. இது  இந்திய பிரான்ஸ் நல்லுறவு வளர்வதற்கு முக்கியமானது ஆகும்.

பொருளாதாரப் பரிமாற்றங்கள்

  1. இந்தியாவில் பல்வேறு உற்பத்தித் தொழில்களில் பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் திருப்தி வெளியிட்டனர். அத்துடன், அந்த பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் ஆய்வு, அபிவிருத்தி வளர்ச்சியடைய மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் திருப்தி தெரிவித்தனர். பிரான்ஸ், இந்திய முதலீட்டாளர்களை ஈர்ப்பது குறித்தும் இரு தலைவர்களும் தங்களது விவாதத்தில் குறிப்பிட்டனர்.
  2. அண்மையில் மேற்கொண்ட இரு தரப்பு வர்த்தகத்தின் வளர்ச்சி குறித்து இரு தரப்பினரும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். இந்த வேகம் நீடித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். சரக்கு வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் 1,500 கோடி யூரோ (ரூ. 1,20,007.36) என்ற இலக்கை எட்ட வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளியிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையில் சிறு, நடுத்தரத் தொழில்களையும் இடைத்தொழில் நிறுவனங்களையும் (mid-cap companies) அவர்கள் ஊக்குவித்தனர். இரு தரப்பின் வர்த்தகம், முதலீடு ஆகியவற்றுக்கு சாதகமான சூழல் அமைவதற்காகவும் தங்களது அர்ப்பணிப்பை அவர்கள் உறுதி செய்தனர்.


a. இந்திய – பிரான்ஸ் கூட்டுக் கமிட்டியின் மூலம் நீடித்த, சீரான பொருளாதார ஒத்துழைப்பு  கோடிட்டுக் காட்டப்பட்டது,


b. நிறுவனங்களின் தலைவர்களின் இணைத் தலைமை கொண்ட பேரவைக் கூட்டத்தில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வகுக்கப்பட்ட புதிய பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன.

  1. பொருளாதார, நிதித் துறைகளில் ஆழமான ஒத்துழைப்புக்காக அமைச்சர்கள் நிலையில் ஆண்டுதோறும் விவாதம் நடைபெற வேண்டியதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.


கல்வி, அறிவியல்- தொழில்நுட்ப ஒத்துழைப்பு

 

  1. அரசின் கட்டமைப்புக்கு உட்பட்டும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இடையில் துடிப்பான கல்வி ஒத்துழைப்பை தலைவர்கள் திருப்தியுடன் அங்கீகரித்தனர். இது தொடர்பாக 2020ம் ஆண்டில் மாணவர் பரிமாற்றத்தை 10 ஆயிரமாக உயர்த்தவும் தரமான மாணவர் பரிமாற்றத்தையும் அதிகரிக்கவும் அவர்கள் ஊக்கமளித்தனர். பட்டப்படிப்புகள் தொடர்பாக பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான உடன்பாட்டிலும் கையெழுத்திடப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். இதன் மூலம் இந்திய மாணவர்கள் பிரான்ஸிலும், பிரான்ஸ் மாணவர்கள் இந்தியாவிலும் மேற்படிப்பைத் தொடர்வதுடன் வேலைவாய்ப்புத் திறனையும் மேம்படுத்திக் கொள்ளலாம். இதற்காக புது தில்லியில் 2018 மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் அறிவுசார் உச்சி மாநாட்டை நடத்தப்படுவதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். இது ஆய்வு, உயர்கல்வி குறித்த முதல் இந்திய – பிரான்ஸ் உச்சி மாநாடாகும்.
  2. திறன்மேம்பாடு இரு நாடுகளுக்கும் முக்கியம் என்று குறிப்பிட்ட இந்தியாவில் பணியாளர்களுக்குப் பயிற்சி, திறன் மேம்பாட்டுக்கு பிரான்ஸ் நிறுவனங்கள் ஆற்றும் முக்கிய பங்கினை இரு தலைவர்களும் வரவேற்றனர்.  தங்கள் துறைகளில் பணியாளர்கள் மேலும் உற்சாகமாக ஈடுபட இது வழிவகுக்கும். இது தொடர்பாக திறன் மேம்பாட்டு நிறுவனங்கள், ஏஜென்சிகள் இடையில் மேலும் நல்லுறவுகள், முறையான ஏற்பாடுகளையும் இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
  3. மேம்பட்ட ஆய்வுக்கான முன்னேற்றத்துக்கான இந்திய – பிரான்ஸ் மையம் (Indo-French Centre for Promotion of Advance Research-CEFIPRA) முக்கிய பங்காற்றியதற்கு  இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். அத்துடன் 2017ம் ஆண்டு 30ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியதையும் அவர்கள் மகிழ்வுடன் குறிப்பிட்டனர். ஆய்வு, சந்தை, சமூகத் தேவை ஆகியவற்றுக்கு இடையில் அடிப்படை ஆய்வு மூலம் கண்டறியப்படுவனவற்றையும் தங்களது தொழில்நுட்ப பயன்பாட்டையும் இணைத்து மேற்கொள்ளும் இந்த மையம் மேற்கொள்ளும் தொடர் பரிமாற்றத்தின் செயல்பாடுகளுக்கு இரு தலைவர்களும்  ஊக்கமளித்தனர். அறிவியல், தொழில்நுட்பம், புதுமையாக்கம் ஆகியவற்றில் இரு நாட்டு ஒத்துழைப்பின் உள்ளீடு மற்றும் வாய்ப்பினை விரிவுபடுத்துவதற்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்த கூட்டுக் கமிட்டியின் கூட்டத்தை இந்த ஆண்டில் நடத்துவதன் தேவையை அவர்கள் வலியுறுத்தினர்.

     

பண்பாட்டுப் பரிமாற்றம்

 

  1. “நமஸ்தே பிரான்ஸ்”  என்ற தலைப்பில் இந்தியக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் 41 நகரங்களில் 83 நிகழ்ச்சிகள் 2016ம் ஆண்டு நடத்தப்பட்டன. தொடர்ந்து இந்தியாவின் 33 நகரங்களில் 300 திட்டங்களை வெளிப்படுத்தும் , “போஞ்சோர் இந்தியா”  என்ற தலைப்பிலான மூன்றாவது நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை இரு நாட்டுத் தலைவர்களும் நினைவுகூர்ந்து பாராட்டினர். பிரான்ஸில் இந்தியா நடத்தி வரும் “70ம் ஆண்டில் இந்தியா”  (‘India@70’) என்ற தலைப்பிலான கொண்டாட்டங்களையும் தலைவர்கள் பாராட்டினர்.
  2. நட்புறவை வளர்ப்பதற்கு முக்கிய காரணியாக விளங்கும் இலக்கியப் பரிமாற்றத்துக்கான முக்கியத்துவத்தையும் இரு நாடுகள் குறிப்பிட்டுப் பாராட்டிய தலைவர்கள், 2020ம் ஆண்டு நடைபெறும் 42வது பிரான்ஸ் புத்தகக் கண்காட்சியில் (Salon du Livre de Paris) இந்தியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதை வரவேற்றனர். அதற்குப் பதில் நிகழ்ச்சியாக தில்லியில் 2022ம் ஆண்டு நடைபெறும் உலகப் புத்தகக் கண்காட்சியில் பிரான்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறது.
  3. சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து அதிகரித்திருப்பதை   பிரதமர் திரு. நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும் திருப்தியுடன் குறிப்பிட்டனர்.  (2014ம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டுக்கு இந்தியாவிலிருந்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது) 2020ம் ஆண்டுக்குள் 10லட்சம் இந்தியப் பயணிகள் பிரான்ஸ் நாட்டிலும், 3,35,00 பிரான்ஸ் பயணிகள் இந்தியாவிலும் சுற்றுலா மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tamil

(Release ID: 1523710)

புதுதில்லி, மார்ச் 10, 2018

India-France Joint Statement during State visit of President of France to India (March 10, 2018)
 


III. Partnership for the planet

III. புவிக்கான கூட்டாண்மை

32. பருவகாலநிலை நீதி கொள்கைகளின் அடிப்படையில், பருவகாலநிலை மாற்றத்திற்கு எதிராக போரிடுதல், பருவகாலநிலை இலகுதன்மையை வளர்த்தல் மற்றும் குறைந்த பசுமைக்குடில் வாயு உமிழ்தல் வளர்ச்சி ஆகியவற்றிற்கான தங்களது உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் உறுதி செய்தன. அனைத்து மனிதகுல நன்மைக்காகவும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து மாற்றமுடியாத உலகளாவிய செயலின் ஒரு பகுதியாக, சி..பி.24-ல் உள்ள பாரிஸ் ஒப்பந்தம் மற்றும்  பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டையும் முழுமையாக செயல்படுத்திட அவை உறுதிபூண்டுள்ளன. இந்நோக்கத்திற்காக 2017, டிசம்பர், 12 அன்று பாரிஸில் நடைபெற்ற ஒரே தாவர மாநாட்டில் நேர்மறையான பங்களிப்பை அவை வலியுறுத்தின.

33. சுற்றுச்சூழலுக்காக உலகளாவிய ஒப்பந்தத்திற்கான பணியை துவக்கியுள்ளதற்கு இந்தியா அளித்துள்ள ஆதரவிற்காக இந்திய பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் நன்றி தெரிவித்தார்.


சர்வதேச சூரியயியல் கூட்டணி

34. சர்வதேச சூரியயியல் கூட்டணிக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் நுழைந்ததை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளதுடன், புதுதில்லியில் 2018, மார்ச், 11 அன்று கூட்டாக ஏற்பாடு செய்துள்ள ஐ.எஸ்.. நிறுவன மாநாட்டை எதிர்நோக்கியுள்ளனர். மிகப்பெரும் அளவில் சூரிய எரிசக்தியை  பயன்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக ஐ.எஸ்.. உதவியுடன் உறுதியான திட்டங்களை மேலும் வலுப்படுவதற்கான தங்களது உறுதியை தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

35. அனைத்து துறைகளிலும் கண்டுபிடிப்புகளை உருவாக்குதல், பரப்புதலை ஊக்குவிப்பதை முன்னுரிமையாக கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான தொழில்நுட்ப கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும் என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர். சூரிய எரிசக்தியின் வளர்ச்சிக்கு ஆதரவாக பொது மற்றும் தனியார் நிதிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக, அவர்கள் சர்வதேச சூரியயியல் கூட்டணிக்குள்ளாக, எம்..டீ..எப்., எஸ்..ஆர்., எப்..சி.சி.. மற்றும் சி... உள்ளிட்ட பிறரும் அதில் இணைய விரும்பும் வண்ணம் தொழில்துறை அமைப்புகள் அடங்கிய சர்வதேச குழுவை ஏற்படுத்துவதை அவர்கள் வரவேற்றனர்.

நிலையான இயக்கம்

36. இந்தியா மற்றும் பிரான்ஸின் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு குறைந்த பசுமை இல்ல வாயு உமிழ்தலுடன் கூடிய சிறப்பான போக்குவரத்து அவசியமானது என்பதை தலைவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர்மின்சார இயக்க போக்குவரத்து வளர்ச்சி தொடர்பான இரு நாடுகளின் வலுவான குறிக்கோள்களை அவர்கள் நினைவுகூர்ந்தனர். இது தொடர்பாக, பிரெஞ்சு வளர்ச்சி முகமை (.எப்.டீ.) அளிக்கும் பிரெஞ்சு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் உள்ளடக்கிய மாற்றத்திற்கான பிரான்ஸ் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் இடையே விருப்ப அறிக்கையில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

37. ரயில்வே துறையில் தங்களது கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் உறுதியை மீண்டும் உறுதி செய்த தலைவர்கள், தில்லி-சண்டிகர் பிரிவை விரைவு பாதையாக உயர்த்துவதற்கான ஆய்வு மற்றும் அம்பாலா மற்றும் லூதியானா நிலையங்களில் நிலைய வளர்ச்சி ஆய்வு முடிவுற்றதை திருப்தியுடன் குறிப்பெடுத்துக் கொண்டனர். தில்லி-சண்டிகர் பிரிவில் வேகத்தை அதிகரிப்பது குறித்த எதிர்கால தொழில்நுட்ப கலந்தாய்வுகளின்போது இப்பிரிவில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் அதன் சிக்கல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையே  தொழிற்சாலை கூட்டுறவிற்கு வழிவகுக்கும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளடக்கிய மாற்றத்திற்கான பிரெஞ்சு அமைச்சகம் ஒரு புறமும், ரயில்வேக்கான இந்திய அமைச்சகமும் மறுபுறம் இணைந்து கூட்டாக நிரந்தர இந்திய-பிரெஞ்சு ரயில்வே மன்றத்தை ஏற்படுத்துவதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஸ்மார்ட் நகரங்கள்

38. பிரதமர் மோடி மற்றும் அதிபர் மக்ரோன் ஆகியோர், பிரெஞ்சு மற்றும் இந்திய பங்கேற்பாளர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகள் பரிமாற்றம் மற்றும்  பலனளிக்கும் கூட்டை குறிக்கும் நிலையான நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களுக்கான சிறப்பான இந்திய-பிரெஞ்சு கூட்டுறவை திருப்தியுடன் குறிப்பெடுத்து கொண்டனர்சண்டிகர், நாக்பூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் மற்றும் இந்த இயக்க கட்டமைப்பின் கீழ் ஏ.எப்.டீ.-ன் தொழில்நுட்ப உதவி விரிவாக்கம் ஆகியவற்றில் சிறப்பான கூட்டுறவை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்ஸ்மார்ட் நகரங்கள் இயக்கத்திற்கு ஆதரவாக 100 மில்லியன் யூரோக்களை பெறுவதற்காக ஏ.எப்.டீ. மற்றும் இந்திய அரசு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

IV. உலகளாவிய தளத்தகை ஒருமுகப்படுத்துதல்களை விரிவாக்குதல்

39. தளத்தகை கூட்டுதாரர்களாக, இரு நாடுகளும் முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த ஒருமித்த பார்வைகளை பரிமாறிக் கொள்வதுடன், பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து, நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படும்.

40.     ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா சேர்வதற்கான தனது ஆதரவை பிரான்ஸ் மீண்டும் உறுதி செய்தது. வெகுஜன அழிவிற்கான ஆயுத பரவலாக்கல் தடுப்பு குறித்து பிரான்ஸ் மற்றும் இந்தியா பொதுவான கவலைகள் மற்றும் நோக்கங்களை பரிமாறிக் கொண்டன.

41. 2016 ஜூன்-ல் எம்.டி.சி.ஆர்.-லும், 2017, டிசம்பர்-ல் வாசினார் ஏற்பாட்டிலும் மற்றும் 2018, ஜனவரி-ல் ஆஸ்திரேலியா குழுவிலும் இந்தியா இணைந்துள்ளதற்கு பிரான்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. வாசினார் ஏற்பாட்டில் இந்தியாவை உறுப்பினராக சேர்வதற்கு உதவிய பிரான்சின் தலைமைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் அவர், ஆஸ்திரேலியா குழுவில் இந்தியாவின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரான்ஸிற்கு நன்றி தெரிவித்தார். உலகளாவிய ஆயுத பரவலாக்கத்தை தடுப்பதை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியாவின் இணைப்பானது, உறுப்பு நாடுகளின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்கு மதிப்பளிக்கும் என்பதை அங்கீகரித்து, அணு வழங்கல் குழுமத்தில் இந்தியாவின் உறுப்பினர் சேர்க்கைக்காக உறுப்பினர்களிடையே ஒருமதித்த கருத்தை உருவாக்குவதற்கான வலுவான மற்றும் உறுதியான ஆதரவை பிரான்ஸ் மீண்டும் உறுதி செய்தது.

42. வடகொரியாவின் அணுஆயுத மற்றும் நீண்ட தூர ஏவுகணை திட்டங்கள் மீதான தொடர் வேட்கை மற்றும் அதன் ஆயுதப்பரவலாக்க இணைப்புகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதை தலைவர்கள் ஒப்புக்கொண்டதுடன், கொரியா தீபகற்பத்தின் முழுமையான, சரிபார்க்கக்கூடிய, திரும்பப்பெறமுடியாத வகையிலான அணுஆயத ஒழிப்பிற்கு அறைகூவல் விடுத்தனர், அதனை வடகொரியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. வடகொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்களை பொறுப்புடையவர்களாக ஆக்க வேண்டும் என்பதை இரு தரப்பும் வலியுறுத்தின. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தடைகளை சர்வதேச சமூகம் அனைத்தும் முழுவதுமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமும், பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியான மற்றும் விரிவான தீர்வு காண அதிக அழுத்தம் அளிக்கும் வகையிலும், இச்சவாலை எதிர்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

43. ஈரான் மற்றும் இ3+3 இடையே கூட்டு விரிவான செயல்திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்துவதற்கான தங்களது ஆதரவை இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் உறுதி செய்துள்ளன. ஈரான் அதன் அணுஆயுத தொடர்பான கூட்டு விரிவான செயல்திட்டத்தை முழுவதுமாக கடைப்பிடிப்பதை சர்வதேச அணுசக்தி முகமை (....) உறுதிசெய்துள்ளதை அவை அங்கீகரித்துள்ளன. ஆயுத பரவலாக்க தடை கட்டமைப்பு மற்றும் சர்வதேச அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிக்கும் வகையிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்திட இரு நாடுகளும் கேட்டுக் கொண்டன. அனைத்து தரப்பினரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 2231 முழுமையாக செயல்படுத்திட அவை கேட்டுக் கொண்டன.

44. சிரியா மக்களின் நியாயமான உணர்வுகளை கணக்கில் கொண்டு அனைத்தும் உள்ளடக்கிய சிரியாவின் தலைமையிலான அரசியல் செயல்திட்டம் மூலம் சிரியாவின் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் தலைமையில் விரிவான மற்றும் அமைதியான தீர்வு காண்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வது அடிப்படையானது மற்றும் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், ஆதரவாளர்களும் தங்களது உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரச்சினைக்கு இராணுவத்தின் மூலம் தீர்வு காண இயலாது என்பதையும் சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் இரு தலைவர்களும் உறுதி செய்தனர். .பி.சி.டபிள்யூ.வின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர்கள், எந்த சூழ்நிலையிலும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதையும் வலியுறுத்தினர்.

45. கொள்கைகள் மற்றும் மாண்புகள் அடிப்படையிலும், சர்வதேச ஆணையின் அடிப்படையிலான விதிகளின் உறுதிப்பாட்டின் அடிப்படையிலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையேயான தளத்தகைக் கூட்டிற்கான தங்களது ஆதரவை தலைவர்கள் மீள உறுதி செய்தனர். பன்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் பொருளாதார, வணிகம் மற்றும் பருவகாலநிலை மாற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான கூட்டை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டதுடன், 2017, அக்டோபர், 6 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 14வது ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சிமாநாட்டின் வெளிப்பாடுகளையும் வரவேற்றுள்ளனர். விரிவான மற்றும் இருதரப்பிற்கும் பலனளிக்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா விரிவான வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (பீ.டி...) தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முயற்சி மேற்கொள்வதற்கான ஆதரவை அவை தெரிவித்தன.

46. இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில், இணைப்பின் முக்கியத்துவத்தை இந்தியா மற்றும் பிரான்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளன.  சர்வதேச நிபந்தனைகள், நல்ல அரசாட்சி, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை ஆகிய முக்கிய கொள்கைகளின் அடிப்படையிலும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் தரங்களை பின்பற்றுதல், நிதி பொறுப்பு, பொறுப்புடைமை கடன் நிதி நடவடிக்கை கொள்கைகளின் அடிப்படையிலும், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இணைப்பு முயற்சிகள் கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

47. ஜி20 முடிவுகளை செயல்படுத்துவதிலும், பிற ஜி20 உறுப்பினர்களுடன் கூட்டாக பணியாற்றி வலுவான, நிலையான, சமமான மற்றும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை அடைவதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளன.

48. நிலையான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி அடைவதற்கு விதிகள் அடிப்படையிலான பன்முக வர்த்தக அமைப்பின் முக்கிய பங்கு, சுதந்திரமான, நியாயமான மற்றும் திறந்த வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். விதிகள் அடிப்படையிலான பன்முக வர்த்தக அமைப்பின் முக்கிய பங்கு, திறந்த மற்றும் உள்ளடக்கிய வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை உறுதி செய்யும் உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுடனும் கூட்டாக பணியாற்றிடும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் அவர்கள் உறுதி செய்தனர்.

49. நிலையான வளர்ச்சிக்கு அடிப்படையாக, உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியாளுமை கட்டமைப்பை மேம்படுத்தவும், அதிகளவில் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல், உள்ளடக்கிய மற்றும் ஒன்றிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பயங்கரவாதம், வறுமை, பசி, வேலை உருவாக்கம், பருவகாலநிலை மாற்றம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவமின்மை உள்ளிட்ட சமத்துவமின்மை உள்ளிட்ட பொதுவான உலகளாவிய சவால்களை எதிர்கொள்தல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளன.

50. திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கூட்டுத் திட்டங்கள் போன்ற வளர்ச்சி சார்ந்த முயற்சிகள் மூலம் ஆப்பிரிக்காவின் நிலையான மற்றும் வளத்திற்கு கூட்டாக மற்றும் ஒன்றிணைந்து பணியாற்றிட பொதுவான விருப்பத்தை இந்தியா மற்றும் பிரான்ஸ் பகிர்ந்துக் கொண்டுள்ளன. பாரிஸில் 2017, ஜூன்-ல் ஆப்பிரிக்கா குறித்த முதலாவது பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பொதுவான திட்டங்களை செயல்படுத்துவதில் தங்களது விருப்பத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பிராந்தியத்தில் பன்னாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் தங்களது சுய பாதுகாப்பின் மூலம் மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஆப்பிரிக்க நாடுகள் விருப்பம் தெரிவிக்கும் வகையில், ஜி5 சாஹேல் கூட்டு படையை ஏற்படுத்துவதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

51. இந்திய பெருங்கடல் ரிம் சங்கம் (..ஆர்..) மற்றும் அது விளைவிக்கும் மாண்புகளுக்கான தங்களது ஆதரவை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்..ஆர்..வின் முன்னுரிமைகளின் உயிர்ப்பான பங்களிப்பிற்கான தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.

52. இத்தகைய மனப்பான்மையுடைய ஒருமுகப்படுத்தக்கூடியவற்றை விரிவுபடுத்தக்கூடிய பணியை இலக்காக கொண்டு, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றின் மீது தொடர் உயர்மட்ட அளவிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தைகளை துவங்கிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் இடையே வருடாந்திர கொள்கை மற்றும் திட்ட பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது.

53. தனக்கும், தனது குழுவினருக்கும் அளித்த விருந்தோம்பலுக்காக, பிரதமர் மோடி அவர்களுக்கும், இந்திய அரசிற்கும் நன்றி தெரிவித்த அதிபர் மக்ரோன் அவர்கள், அவரை பிரான்ஸில் வரவேற்பதை எதிர்நோக்கியுள்ளார்.

****

 

 

 



(Release ID: 1523890) Visitor Counter : 809


Read this release in: English