நிதி அமைச்சகம்
மோசடி பதிவுக்கான மத்திய அமைப்பு
Posted On:
09 MAR 2018 5:57PM by PIB Chennai
மோசடி பதிவுக்கான மத்திய அமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உருவாக்கியுள்ளது. 2014-15, 2015-16, 2016-17 ஆகிய நிதியாண்டுகளில் ஏடிஎம்/டெபிட் கார்டு, இணைய வங்கி மூலமாக ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு கூடுதலான தொகை மோசடிகள் முறையே 13,083, 16,468, 13,653 என்ற எண்ணிக்கையில் இருந்ததாக வணிக வங்கிகளால் அளிக்கப்பட்ட விவரங்கள் இந்த அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டள்ளது. ஆர்பிஐ-யின் வழிகாட்டுதல்படி மோசடி வழக்குகள் பற்றி சட்ட அமலாக்க அமைப்புகளிடம் வங்கிகள் தெரிவிக்க வேண்டும். சட்ட அமலாக்க அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் விளைவுகள் தொடர்பான தகவல் மையப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படவில்லை.
மக்களவையில் இன்று (9.3.2018) கேள்வி நேரத்தின்போது எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தை பார்க்கவும்
---
(Release ID: 1523832)