நிதி அமைச்சகம்

ஆயிரம் கிகாவாட் சூரியசக்தி மின்சக்தி அமைப்பை உருவாக்கவும் 2030-க்குள் சூரியசக்தித் துறையில் அமெரிக்க டாலர்.1000 கோடி திரட்டுவதற்கும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி பணியாற்றுகிறது.

प्रविष्टि तिथि: 10 MAR 2018 12:13PM by PIB Chennai

சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, பசுமை பருவநிலை நிதியம், புதிய மேம்பாட்டு வங்கி ஆகியன கூட்டாக இன்று (10.3.2018) புதுதில்லியில் நிதி ஒத்துழைப்பு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. சர்வதேச எரிசக்தி முகமை ஐஎஸ்ஏ-வுடன் கூட்டு ஒத்துழைப்பு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு
அருண் ஜேட்லி. மின்சாரம் மற்றும் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தித்துறை  இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஆர் கே சிங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. புதுப்பிக்கக் கூடிய எரிசக்திக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்த ஒப்பந்தங்களின் நோக்கமாகும்முன்னதாக உலக வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி, மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கி ஆகியவற்றுடன் மூன்று ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை ஐ எஸ் ஏ செய்து கொண்டுள்ளது. சர்வதேச புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி முகமை 11.3.2018 அன்று கூட்டு ஒத்துழைப்பு பிரகடனத்தில் கையெழுத்திடும்.

    ஆயிரம் கிகாவாட் சூரியசக்தி மின்சக்தி அமைப்பை உருவாக்கவும் 2030-க்குள் சூரியசக்தித் துறையில் அமெரிக்க டாலர்.1000 கோடி திரட்டுவதற்கும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி பாடுபட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்

--------


(रिलीज़ आईडी: 1523828) आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English