குடியரசுத் தலைவர் செயலகம்

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் நிறுவக மாநாட்டில் பங்கேற்கும் பிரான்ஸ் குடியரசின் அதிபர் மற்றும் பல்வேறு நாடுகளின் / அரசின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்தளித்து கவுரவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2018 9:42PM by PIB Chennai

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் நிறுவக மாநாட்டில் பங்கேற்கும் பிரான்ஸ்  குடியரசின் அதிபர் மேதகு திரு.இம்மானுவேல் மேக்ரன்   மற்றும் பல்வேறு நாடுகளின் / அரசின் தலைவர்களுக்கு  குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று (மார்ச் 10, 2018)  விருந்தளித்து கவுரவித்தார்.

45-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து வருகை புரிந்துள்ள அதிபர்கள், துணை அதிபர்கள், பிரதம மந்திரிகள், துணைப் பிரதம மந்திரிகள், அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை வரவேற்ற குடியரசுத் தலைவர் சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்புக்கு அவர்களின் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தார். சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு ஒளிமிக்க பயணத்தை தொடங்குகிறது என்று அவர் கூறினார். நமது புவிக்கோளின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வருகை புரிந்துள்ள ஏராளமான சிறப்புமிக்க தலைவர்கள் நாளைய மாநாட்டில் பங்கேற்கவிருப்பது ‘நமது முன்னோர்களிடமிருந்து எதிர்காலத்தை நாம் மரபுரிமை கோரவில்லை; நமது குழந்தைகளிடமிருந்து அதனை கடன் வாங்குவோராக நாம் இருக்கிறோம்’ என்பதை உறுதிப்படுத்துகிறது. எதிர்காலத்திற்கான நமது கடனின் பங்களிப்பை உணர்ந்திருப்பது சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பை வடிவமைப்பதற்கு வழிவகுத்துள்ளது.

ராணுவங்களுக்கிடையே நடைமுறை தொடர்புகளை நாம் விரிவாக்கி இருப்பதால் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி பங்குதாரர்கள் ஆவதற்கான நுழைவாயிலில் இந்தியாவும்  பிரான்ஸூம் இருப்பதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். தூய்மையான, புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கும் நீடித்த வளர்ச்சிக்குமான தேடலில் பிரான்ஸை முக்கிய பங்குதாரராக  இந்தியா காண்கிறது.

இந்தியா-பிரான்ஸ் இடையேயான உலக பங்களிப்பு விரிவடையும் நிலையில் இருப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்காக எப்போதும் போல் மகத்தான உறுதிப்பாட்டுடன் ஒன்றுபட்டு செயலாற்றுவதை நாம் தொடரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

                                ---


(வெளியீட்டு அடையாள எண்: 1523824) வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க: English