நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி குழுவின் 26-வது கூட்டத்தின்போது தரவு பகுப்பாய்வு தொடர்பாக செய்யப்பட்ட பரிந்துரைகள்

Posted On: 10 MAR 2018 4:45PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (10.3.2018) நடைபெற்ற 23-வது கூட்டத்தில்  ஜிஎஸ்டி குழுவிடம் மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம், ஜிஎஸ்டி கட்டமைப்பு ஆகியன தங்கள் வசமுள்ள தரவுகளைக் கொண்டு விரிவான பகுப்பாய்வு பணியை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தரவு பகுப்பாய்வின் பூர்வாங்க நிலையில் பல ஆர்வமூட்டும் விஷயங்கள் வெளிவந்துள்ளன:

  • இறக்குமதியாளர்கள், சுங்கத் துறைமுகங்களில் செலுத்தும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இழப்பீடு செஸ்ஸூக்கும், ஜிஎஸ்டி ஆர்-3பி-யில் கோரப்பட்டுள்ள உள்ளீடு வரித் தொகைக்கும் வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
  • ஜிஎஸ்டி ஆர்-1 படிவம் மற்றும் ஜிஎஸ்டி ஆர்-3பி படிவம், ஆகியவற்றில் தாமாக அறிவித்த பொறுப்புத் தொகைகளுக்கு இடையே பெரிய தரவு வேறுபாடு காணப்பட்டது.

இந்தத் தகவல் மேலும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்றால் போல போதுமான நடவடிக்கை எடுப்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

--------(Release ID: 1523823) Visitor Counter : 51


Read this release in: English