பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் : சாதனைகளும் முன்னேற்றமும்
Posted On:
07 MAR 2018 6:51PM by PIB Chennai
- பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் – திட்டத் தொடக்கம்
பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் திட்டம் 2015 ஜனவரி 22-ஆம் தேதி ஹரியானா மாநிலம் பானிபட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. குழந்தைகள் பாலின விகிதாச்சாரம் குறைந்து வரும் பிரச்சினை மற்றும் மகளிர் அதிகாரம் அளித்தல் பிரச்சினை ஆகியவற்றுக்காக மத்திய அரசின் பெரிய திட்டங்களில் ஒன்றாக இது தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மனித வள மேம்பாடு ஆகிய மூன்று அமைச்சகங்களின் இணைந்த முயற்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வலியுறுத்தல் ஆலோசனைகள் வழங்குதல், மனநிலைகளை மாற்றும் இயக்கங்கள், குறைந்த குழந்தைகள் பாலின விகிதாச்சாரம் உள்ள 161 தேர்ந்தெடுத்த மாவட்டங்களில் பலமுனை செயல்பாடு, பெண் கல்விக்கு வசதி செய்தல், கருவுறுதலுக்கு முந்தைய மற்றும் கருவுற்றப் பின் கண்டறியும் தொழில்நுட்ப திட்டத்தை திறன்பட அமலாக்குதல் என்ற பணிகளுக்காக உருவாக்கப்பட்டது.
இதுவரையிலான திட்ட முன்னேற்றம் :
- திட்டத்தின் முதலாவது கட்டத்தில் (2014-15ல் அதாவது 2015 ஜனவரியில்) 100 மாவட்டங்களில் திட்டம் தொடங்கப்பட்டதுஃ 2ஆவது கட்டத்தில் (2015-16, பிப்ரவரி 2016) மேலும் 64 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டது.
- இந்தத் திட்டம் அனைவராலும் நன்கு வரவேற்கப்பட்டது. குழந்தை பாலின விகிதாச்சாரத்தை தேசிய அலுவல் பட்டியலாக மேம்படுத்துவதில் வெற்றி பெற்றது. மேலும் உயர்நிலை விழிப்புணர்ச்சி நல்லுணர்வு, குழந்தைகள் பாலின விகிதாச்சார குறைவு பிரச்சினையை சுற்றிய உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in. என்ற வலைதளத்தை பார்க்கவும்
------
(Release ID: 1523759)