ரெயில்வே அமைச்சகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திய ரயில்வேயின் வசதிகள்
प्रविष्टि तिथि:
07 MAR 2018 5:47PM by PIB Chennai
ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்பட அனைத்துப் பயணிகளுக்கும் போதிய வசதிகளை அளிப்பதும், ஏற்கெனவே உள்ள வசதிகளை அதிகரிப்பதும் தொடர் நடவடிக்கையாகும். அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகள், வயதான பயணிகளுக்குப் போதிய வசதிகளை அளிக்கும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறுகிய கால வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது:
- ரயில்நிலையத்தில் எளிதில் நுழைவதற்குத் தடையற்ற சீரான சரிவுப் பாதை.
- வாகன நிறுத்துமிடங்களில் தனியாக இரு பகுதிகள் ஒதுக்குதல்.
- வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து கட்டடத்துக்குள் நுழைய வழுக்காத நடைபாதை.
- குறியீடுகள் கொண்ட பலகைகள் தெளிவாகத் தெரியும்படி அமைத்தல்.
- குறைந்தது ஒரு கழிவறையாவது அதிலும் தரை தளத்தில் அமைத்தல்.
- மாற்றுத் திறனாளிகள் வசதியாகப் பயன்படுத்தும் வகையில் குறைந்தது ஒரு குடிநீர்க் குழாயாவது அமைத்தல்.
- “உங்களுக்கு உதவத் தயார்” (May I help you) என்ற அறிவிப்புடன் மையங்கள் அமைத்தல்.
இவை தவிர, ‘A-1’, ‘A’ & ‘B’ வகையிலான ரயில் நிலையங்களில் நீண்டகால வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஒரு நடைமேடையிலிருந்து இன்னொரு நடைமேடைக்கு எளிதில் இடம் மாற வசதி அமைத்தல்.
- நடைமேடைகளின் விளிம்பில் உணரும் வகையிலான தரை.
மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ரயில்வே துறை 171 ரயில் நிலையங்களில் மொத்தம் 467 நகரும் படிக்கட்டுகளும், 134 நிலையங்களில் மொத்தம் 318 மின் தூக்கிகளும் அமைத்துள்ளது.
இத்தகவல்கள் மக்களவையில் இன்று ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் இடம்பெற்றுள்ளன. மேலும் விவரங்களுக்கு இணையதளம் : www.pib.nic.in
****
(रिलीज़ आईडी: 1523625)
आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English