எரிசக்தி அமைச்சகம்

திரு.ஆர்.கே.சிங், இந்தியாவில் தேசிய இ-மொபிலிட்டித் திட்டத்தை தொடங்கி வைத்தார். 40 லட்சம் எல்.இ.டி. தெருவிளக்குகளை அமைத்ததற்காக இ.இ.எஸ்.எல். நிறுவனத்திற்கு பாராட்டு

Posted On: 07 MAR 2018 7:54PM by PIB Chennai

மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு.ஆர்.கே.சிங், இ-மொபிலிட்டி எனப்படும், தேசிய மின்சார வாகனங்கள் மாற்றுத் திட்டத்தை புதுதில்லியில் தொடங்கி வைத்தார். வாகன உற்பத்தி, சார்ஜ் செய்யும் கட்டமைப்பு நிறுவனங்கள், வாகன இயக்குனர்கள், சேவை வழங்குவோர் ஆகிய பிரிவுகளில் முழுமையாக மின்சார வாகனங்களை சுற்றுச்சூழல் முறைக்கு ஏற்ப இயக்குவதற்கு ஊக்கமளிப்பதை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை எரிசக்தி திறன் சேவை நிறுவனம், தேவைக்கேற்ப மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யும் வகையில் செயல்படுத்தும். தற்போது இயக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் மாற்றப்படும். எரிசக்தி திறன் சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 10 ஆயிரம் மின்சார வாகனங்களை வாங்கியுள்ளது. மேலும் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு விரைவில் கூடுதலாக 10 ஆயிரம் வாகனங்களை வாங்க புதிய டெண்டர் அளிக்கப்பட உள்ளது.


(Release ID: 1523595) Visitor Counter : 126
Read this release in: English