பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி தேசிய தலைநகரப் பகுதி ஆகியவற்றில் பயிர்க் கழிவுகளை பயிர் நிலத்திலேயே நிர்வகிப்பதற்கான வேளாண் அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 07 MAR 2018 8:09PM by PIB Chennai

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி தேசிய தலைநகரப் பகுதி ஆகியவற்றில் பயிர்க் கழிவுகளை பயிர் நிலத்திலேயே நிர்வகிப்பதற்கான வேளாண் அமைப்பை உருவாக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்திற்கு  மத்திய நிதியிலிருந்து செலவிடப்படும் மொத்த தொகை ரூ.1151.80 கோடி (2018-19ல் ரூ.591.65 கோடி மற்றும் 2019-20ல் ரூ.560.15 கோடி).

பின்னணி:

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றில் காற்று மாசுபடும் பிரச்சினையை சமாளிக்கவும், பயிர்க்கழிவுகளை பயிராகும் நிலத்திலேயே நிர்வகிப்பதற்கான எந்திரங்களை மானிய விலையில் வழங்கவும், இந்த மாநிலங்களுக்கு 2018-19 முதல் 2019-20 வரையிலான காலத்திற்கு 100 சதவீத மத்திய பங்குடன் கூடிய புதிய மத்தியத்துறை திட்டம் 2018-19வது ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டது.

 மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தை பார்க்கவும்

-------------------------


(रिलीज़ आईडी: 1523569) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English