பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் 30 மதிப்புறு பெண்கள் மற்றும் 9 தனிச் சிறப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான பெருமைமிகு நாரி சக்தி விருதுகளை வழங்கினார்.
प्रविष्टि तिथि:
08 MAR 2018 8:17PM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், 2017-ம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விருதுகள் பெண்களின் நலனுக்காக குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் மற்றும் ஒடுக்கப்பட்ட மகளிர் நலனுக்காக தனிச் சிறப்பு வாய்ந்த தொண்டாற்றியவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 30 மதிப்புறு பெண்களுக்கும், 9 சிறப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. மேனகா காந்தி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக மத்திய அரசு இடையறாது பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மகளிர் அதிகாரமளித்தலுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், 1.26 கோடி மாணவிகள் மற்றும் 16.44 கோடி பெண்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளனர்; 6.28 கோடி மகளிர் தொழில் முனைவோருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
நாரி சக்தி விருது பெற்றவர்களின் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.
(रिलीज़ आईडी: 1523561)
आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English