ரெயில்வே அமைச்சகம்
ரயில்வேக்களில் பாரம்பரிய பாதுகாப்பு
प्रविष्टि तिथि:
07 MAR 2018 5:49PM by PIB Chennai
இந்திய ரயில்வேக்களில் பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.
2018 மார்ச் முதல் தேதி முதல் 15ம் தேதிவரை ரயில்வே பாரம்பரிய சொத்துக்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் சிறப்பு இயக்கத்தை மேற்கொள்ளுமாறு மண்டல ரயில்வேக்கள் / உற்பத்திப் பிரிவுகள் ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கட்டடங்கள், பாலங்கள், ரயில் பெட்டிகள், ஆவணங்கள், புகைப்படங்கள், கைவினைப்பொருட்கள், கருவிகள், கடிகாரங்கள், பெஞ்சுகள் போன்ற பாரம்பரிய மிக்க பொருட்களை பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று (7.3.2018) கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்
-------------------------
(रिलीज़ आईडी: 1523527)
आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English